Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15 ஆண்டுகள் முடிந்துவிட்டதா.. கேக் வெட்டி கொண்டாடிய தோனி - சாக்‌ஷி.. வெளியான ஜாலி வீடியோ!

ராஞ்சி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி இருவரும் தங்களது 15வது திருமண நாளினை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று 3 வகையான கோப்பையையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை தோனி வென்ற போது, நீண்ட தலைமுடியுடன் கூடிய ஹேர்ஸ்டைலில் இருந்தார். அதன்பின் ஹேர்ஸ்டைலை தோனி மாற்றிக் கொண்டார்.

ipl ipl 2024 rcb vs csk ms dhoni 2024

அந்த ஹேர்ஸ்டைல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய காதலியான சாக்‌ஷி தான். நீண்ட நாட்களாக காதலித்து வந்த தோனி - சாக்‌ஷி இருவருக்கும் 2010ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி டெஹ்ராடூனில் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த திருமணத்தில் இந்திய அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா மட்டுமே கலந்துகொண்டார்.

அதன்பின் வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. உலகக்கோப்பை தொடரின் தோனி விளையாடி வந்ததால், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னரே தோனி நேரில் வந்து தனது குழந்தையை சந்தித்தார். தோனியின் வெற்றிக்கு எப்போதும் சாக்‌ஷி உறுதுணையாக இருந்தவர்.

ipl ipl 2024 rcb vs csk ms dhoni 2024

குழந்தை ஓரளவிற்கு வளர்ந்த பின், சாக்‌ஷி மற்றும் அவரது மகள் ஸிவா இருவரும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வரத் தொடங்கினர். இதனால் இவர்களையும் சிஎஸ்கே ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தோனி - சாக்‌ஷி தம்பதியினர் தங்களின் 15வது திருமண நாளினை எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ipl ipl 2024 rcb vs csk ms dhoni 2024

அண்மை காலங்களில் தோனி தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வரும் சூழலில், சாக்‌ஷி-யின் இன்ஸ்டாகிராம் மூலமாகவே ரசிகர்கள் தோனியின் வாழ்க்கை தொடர்புடைய அப்டேட்களை அறிந்து வருகின்றனர். அந்த வகையில் 15வது திருமண நாளினை முன்னிட்டு சாக்‌ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்களும் சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Story first published: Thursday, July 4, 2024, 13:24 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+