Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிட்டயர்மென்ட் ஆன பின்பும் நம்பர் 1.. தோனியின் புதிய உச்சம்.. விராட் கோலியை விட அதிக விளம்பரம்

மும்பை: 43 வயதாகும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் ஆன பின்னரும் விளம்பர உலகில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். சமீபத்தில் "டி ஏ எம் மீடியா ரிசர்ச்" என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2024-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிக விளம்பர ஒப்பந்தங்களை செய்த பிரபலங்களின் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார்.

தோனி 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் ஆறு மாதங்களில் 42 விளம்பர ஒப்பந்தங்களை கைப்பற்றி இருக்கிறார். சமீபத்தில் ஈரோகிரிப் டயர்ஸ், கல்ஃப் ஆயில், கிளியர்ட்ரிப், மாஸ்டர் கார்ட், சிட்ரன் (கார் நிறுவனம்), லேஸ் (நொறுக்குத்தீனி), கருடா ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் தோனி நடித்து இருந்தார்.

ipl 2025 chennai super kings cricket 2025

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிக விளம்பரங்களை கைப்பற்றிய பிரபலங்களின் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இருக்கிறார். அவர் 41 விளம்பர ஒப்பந்தங்களை கைப்பற்றி இருக்கிறார். மற்றொரு பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாரூக் கான் 34 விளம்பர ஒப்பந்தங்களை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் தோனியை தவிர்த்து இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் சவுரவ் கங்குலி 24 விளம்பர ஒப்பந்தங்களுடன் 8 வது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 21 விளம்பர ஒப்பந்தங்களுடன் 10 வது இடத்தில் இருக்கிறார்.

இதன் மூலம் விளம்பர உலகில் தோனி உச்சத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பின்னர் அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். 2025 ஐபிஎல் தொடரில் அவருக்கு 4 கோடி மட்டுமே சம்பளமாக அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அவர் விளம்பர உலகில் உச்சத்தில் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, December 10, 2024, 12:15 [IST]
Other articles published on Dec 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+