Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- பொட்டு வச்ச தங்கக் குடம்! சிஎஸ்கேக்கு மீண்டும் வருகிறார் தோனி..ஆர்சிபிக்கு இருக்கு கச்சேரி

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற முடிவை ஒவ்வொரு அணியும் அறிவிக்க அக்டோபர் 31ஆம் தேதி தான் கடைசி நாளாகும். அதற்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய முடிவை அறிவிக்க வேண்டும்.

இந்த சூழலில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு 43 வயதாகிவிட்டது. இந்த நிலையில் தோனி மீண்டும் ஒரு சீசன் சென்னை அணிக்காக விளையாடுவாரா? இல்லையா? என்பதுதான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

ipl 2025 csk ms dhoni ipl retention 2025

தோனி, ஐபிஎல் கோப்பையுடன் விலகி செல்ல வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் அதற்கான வாய்ப்பு கிடைத்த போது, ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை விளையாட போகிறேன் என தோனி கூறினார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமாக மிஞ்சியது.

கடைசி கட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப் சீசனுக்கு சென்றிருக்கலாம். ஆனால் ஆர் சி பி அணியிடம் தோல்வியை தழுவி சிஎஸ்கே சொல்லில் அடங்காத அளவுக்கு துயரங்களை சந்தித்தது. ஆர்சிபி ரசிகர்கள் சென்னை அணியையும் தோனியையும் பயங்கரமாக கிண்டல் கேலி செய்தார்கள். இந்த நிலையில் தோனி எதற்காகவே மீண்டும் ஒரு சீசன் வந்து rcb அணியை பழிவாங்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.

அந்த வகையில் ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்கு தயாராக வீரர்களை uncapped வீரராக கருதி அவர்களை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு விதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி தோனி நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு திரும்பி அடுத்த சீசனில் விளையாட தோனி ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் மாதத்திற்குள் தன்னுடைய முழு உடல் தகுதியை எட்ட முடியும் என தோனி நம்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 31ஆம் தேதி வீரர்கள் தக்கவைக்கப்படும்போது தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தோனி 234 போட்டிகளில் விளையாடி 4669 ரன்கள் அடித்திருக்கிறார்.

Story first published: Wednesday, October 9, 2024, 15:54 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+