Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஓய்வு குறித்து தோனி சொன்ன பதில்.. அடுத்த சீசனில் ருதுராஜ்க்கு கவலையில்லை என பேச்சு

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சிஎஸ்கே அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது. எனினும் புள்ளி பட்டியலில் நூழிலையில் ஒன்பதாவது இடத்தை தவறவிட்டது.

இந்த சூழலில் தோனிக்கு தற்போது 45 வயது நெருங்குகிறது. இந்த நிலையில் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தோனி அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

MS Dhoni

போட்டிக்குப் பிறகு பேசிய தோனி, இன்று அதிகளவு ரசிகர்கள் வந்தார்கள். ஆனால் ஹவுஸ்புல் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இது மிகப்பெரிய மைதானம். இந்த தொடர் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த படி இந்த சீசன் இல்லை. ஆனால் இன்றைய ஆட்டம் மிகவும் பிரமாதமாக அமைந்தது.

நாங்கள் எதிர்பார்த்த படி அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த சீசனில் எங்கள் கேட்சிங் சரியில்லை. ஆனால் இன்று அனைவரும் நல்ல விதமாக பில்டிங் செய்தார்கள். என்னுடைய ஓய்வு முடிவு குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதற்கு இன்னும் நான்கு ஐந்து மாதம் நேரம் இருக்கிறது என்று நினைக்கின்றேன். என்னுடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கிரிக்கெட் செயல்பாடுகள் சரியில்லை என கூறி வீரர்கள் ஓய்வு பெற தொடங்கினார்கள். சில வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவிக்க வேண்டும்.

நான் தற்போது ராஞ்சிக்கு செல்ல போகிறேன். வீட்டிற்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. அங்கு சில பைக் ரெய்டுகளை செய்யப் போகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்றும் நான் சொல்லவில்லை. அதே சமயம் நான் அடுத்த சீசனுக்கு திரும்பி வருவேன் என்று உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

எனக்கு முடிவு எடுக்க அதிக நேரம் இருக்கிறது. எனவே அதைப் பற்றி யோசித்து தான் நான் என்னுடைய முடிவை கூறுவேன். இந்த சீசன் தொடக்கத்தில் நாங்கள் சென்னையில் நான்கு போட்டிகள் விளையாடினோம். அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்று நான் நினைத்தேன்.

இதேபோன்று எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் இந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நீங்கள் அணியில் சில ஓட்டைகளும் இருந்தது. ஆனால் இம்முறை அனைத்தையும் சரி செய்து விட்டோம். அடுத்து சீசனில் ருதுராஜ்க்கு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. 14 வயது வீரரான வைபவ் என்னுடைய காலில் விழுந்த போது எனக்கு திடீரென்று நான் வயதாகி விட்டேனோ என்று தோன்றியது. ஆண்ட்ரே சித்தார்த் என்ற வீரர் பேருந்தில் என் அருகில் அமர்ந்திருந்தார் .அப்போது அவரின் வயதை கேட்டேன். என்னை விட 25 வயது குறைந்தவராக அவர் இருக்கிறார். அப்போதுதான் நமக்கு வயதாகி விட்டது என்று நான் உணர்ந்தேன் என தோனி கூறினார்.

Story first published: Sunday, May 25, 2025, 19:54 [IST]
Other articles published on May 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+