சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்கியது என்றால் பல திறமை வாய்ந்த வீரர்கள் தொடர்ந்து அணியில் நீடித்து வந்ததே அதற்கு காரணமாகும். டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களின் ஒருவராக கருதப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் முதல் மூன்று சீசன்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடினார்.
அதன் பின் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக பிராவோ விளையாடி வந்தார். இந்த சூழலில் பிராவோ கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துக் கொண்டார். அதன்பின் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ செயல்பட்டு 2023 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வெல்ல பயிற்சியாளராக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்த சூழலில் பிராவோ திடீரென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சென்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஆழ்த்தியுள்ளது. சென்னை அணியின் முக்கிய தூண்களில் ஒருவராகவும் தோனியின் உற்ற நண்பராகவும் இருந்த பிராவோ ஏன் சிஎஸ்கே அணியை விட்டு விலகினார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் தோனிக்கும், பிராவோவுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. ஐபிஎல் அணி தக்க வைக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கும்போது பிராவோ, தோனி அணியை விட்டு விலகி செல்வதை எதிர்காலத்திற்கு சரியான முடிவாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். தோனி தற்போது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கி விளையாட முடியாததால் அவருக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பிராவோ பேசி இருக்கிறார்.
இதுதான் பிரச்சனைக்கு காரணம் எனத் தெரிகிறது. பிராவோ வின் இந்த கருத்து தோனியை கடுப்பாக்கி இருப்பதாகவும், பிராவோவின் கருத்தை தோனி முற்றிலுமாக புறந்தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதே போன்று அண்மையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் பிராவோக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் பிராவோ ஐபிஎல் தவிர மற்ற லீக் தொடர்கள் விளையாடுகிறார்.
ஆனால் சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது வயது மூப்பு காரணமாக அவரை அணியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தோனி மட்டும் அதைப் பின்பற்றாமல் தொடர்ந்து விளையாடி வருவதை சுட்டிக்காட்டி தான் பிராவோ கேள்வி எழுப்பி இருக்கிறார். இதன் காரணமாகவே பிராவோ சிஎஸ்கேவை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.