மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் முதல் முறையாக நிறைவு செய்திருக்கிறது. தற்போது தோனிக்கு ஜூலை மாதம் வந்தால் 44 வயதாகிவிடும். இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோனி கடந்த சில சீசன்களாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவர் கடைசியாக 200 ரன்கள் தொட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதற்கு காரணம் தோனி பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் களமிறங்குவது தான். இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் தோனி எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டு சீசனில் தோனி 16 போட்டிகளில் விளையாடி 414 ரன்களும், 2009 ஆவது சீசனில் தோனி 332 ரன்களும், 2010 வது சீசனில் 288 ரன்களும், 2011 ஆம் ஆண்டு சீசனில் 392 ரன்களும் குவித்துள்ள தோனி 2012 ஆம் ஆண்டு சீசனில் 358 ரன்களும் விளாசி இருந்தார்.
2013 ஆம் ஆண்டு தோனி 461 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு 371 ரன்கள் எடுத்திருந்தார். 2015 ஆம் ஆண்டு சீசனில் 372 ரன்களும், புனே அணிக்காக 2016 ஆம் ஆண்டு 284 ரன்கள், 2017 ஆம் ஆண்டு சீசனில் 290 என்பது தோனி எடுத்திருந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கம்பேக்கில் 2018 ஆம் ஆண்டு தோனி 16 போட்டியில் விளையாடி 455 ரன்கள் விளாசியும், 2019 ஆம் ஆண்டு 416 ரன்களை குவித்து இருந்த தோனி 2020 ஆம் ஆண்டு வெறும் 200 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு தோனி 114 ரன்கள் எடுத்துள்ள தோனி, 2022 ஆம் ஆண்டு 232 ரன்களையும், 2023 ஆம் ஆண்டு 104 ரன்கள் அடித்திருந்தார். 2024 ஆம் ஆண்டு தோனி 161 ரன்களையும், 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனி 196 ரன்களையும் அடித்து இருந்தார். இதுவரை தோனி 278 போட்டிகளில் விளையாடி 5,439 ரன்களை அடித்திருக்கிறார்.
தோனியின் சராசரி 38 என்ற அளவில் இருக்கிறது தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அரை சதம் விழாவில் மூன்று ஆண்டுகள் ஆகிறது. நடப்பு சீசனில் தோனி 12 பவுண்டரி 12 சிக்ஸர்களும் 2024 ஆம் ஆண்டு சீசனில் 14 பவுண்டரி 13 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு மூன்று பவுண்டரி 10 சிக்ஸர்களும் 2022 ஆம் ஆண்டு 21 பவுண்டரி 10 சிக்ஸர்களும் தோனி அடித்து இருந்தார்.