மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைக்க போகிறோம் என்பதை வரும் தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறது.
இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைக்கும் என்று ரசிகர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த வீரர்கள் தங்களது அணியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை கிண்டல் செய்யும் விதமாக தோனி தற்போது பேசி இருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நீங்கள் எதிர்பார்ப்பது போல் ஐபிஎல் ஏலம் நடைபெறாது. அது வினோதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் எந்த வீரர்கள் வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.
ஆனால் எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்வார்கள். ஐபிஎல் ஏலம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. அது வினோதமாக செயல்படும். இதற்காக ஒவ்வொரு அணியினரும் அதற்காக தயாராகி இருப்பார்கள். ஐபிஎல் ஏலத்திற்கு சென்ற பிறகு எந்த வீரர் எந்த அணியில் இடம் பெறுவார்கள் என்று நமக்கு தெரியாது.
ஆனால் ரசிகர்கள் ஆர்வம் மிகுதி காரணமாக இந்த அணி இந்த வீரர்களை தான் வாங்கும் என்று கணிக்கிறார்கள். ஆனால் ஐ பி எல் ஏலத்தில் உங்களைப் போலவே ஒவ்வொரு அணிக்கும் அதிக பணம் கையிருப்பு இருக்கும். இதனால் நீங்கள் நினைத்த வீரர்களை வாங்க முடியாது. எந்த அணி உங்களை வாங்குகிறார்களோ அவர்களுக்காக நீங்கள் சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும்.
இதுதான் ஐபிஎல் ஏலத்தில் உள்ள நல்ல விஷயம் என்று சொல்லலாம். நீங்கள் நினைத்த அணிக்கு செல்லலாம். நினைத்த அணியில் இருந்து வேறு அணிக்கு மாறலாம் போன்ற வணிகம் எல்லாம் இங்கு கிடையாது. ஆனால் ரசிகர்கள் தாங்களே ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் போல் செயல்படுகிறார்கள் என்று தோனி கிண்டல் செய்துள்ளார்.