Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒரே கையில் சிக்சர்.. 236 ஸ்ட்ரைக் ரேட்.. 43 வயதிலும் நான் தான் கிங் என நிரூபித்த தோனி

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் வெற்றி ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த சூழலில் பிளே ஆப்க்கு செல்ல வேண்டும் என்றால், இன்னும் எஞ்சியிருக்கும் 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெல்ல வேண்டும். இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு பல காரணங்கள் இருந்தது.

MS Dhoni

அதில் குறிப்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது வீரராக களம் இறங்கி ரன்களை அடிக்கிறார் என்பது தான் முக்கியமான காரணமாக இருந்தது. பலரும் தோனியின் முன்பே பேட்டிங் செய்ய வருவதில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். கடைசி இரண்டு ஓவர்களில் சிக்சர் அடிக்கும் தோனி, முன்பே பேட்டிங் செய்ய வந்தால் அணியின் வெற்றி வாய்ப்பு சிறப்பானதாக இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 167 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி சேஸ் செய்தது. அப்போது 11 ரன்களுக்கு ஐந்தாவது விக்கெட்டை சிஎஸ்கே கிடந்தது. அப்போது பேட்டிங் செய்ய வந்த தோனி தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை காட்டினார். 43 வயதாக இருந்தாலும் படையப்பா படத்தில் எப்படி கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி தன்னுடைய கட்டுமஸ்தான உடலை காட்டி சண்டை போடும் போது அப்பாஸ் உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று கூறுவாரோ அதேபோல் தோனி தன்னுடைய பழைய அதிரடியை காட்டி ரசிகர்களை டைம் டிராவல் செய்து 10 ஆண்டுக்கு முன் அழைத்து சென்றார்.

இதில் குறிப்பாக சர்துல் தாக்கூர் வீசிய ஒரு பந்தில் தோனி ஒற்றை கையில் சிக்சர் அடித்து அசத்தினார். பொதுவாக ரிஷப் பண்ட் தான் இப்படி ஒற்றை கையில் சிக்சர் அடித்து கெத்து காட்டுவார். ஆனால் அவர் முன்பே தோனி இதை செய்து அசத்தினார். 11 பந்துகளை எதிர்கொண்ட தோனி 26 ரன்களை சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும்.

இதில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 236 என்ற அளவில் இருந்தது.இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் ராகுல் திருப்பாதி, ஜடேஜா போன்ற வீரர்கள் சரியாக விளையாடாமல் போனது. விஜய் சங்கர் ரசிகர்கள் மத்தியில் டி20 வீரராக நம்பிக்கையை பெறாதது போன்ற பல குறைகள் இருக்கின்றது.

Story first published: Tuesday, April 15, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+