சென்னை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி மீண்டும் ஒரு முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், JioHotstar-ல் "The MSD Experience" நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜை தேர்வு செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ருதுராஜின் தீவிரமான திட்டமிடலே இதற்கு முக்கியம். பல ஆண்டுகளாக CSK அணியில் இருந்திருக்கிறார். அவருடைய மனநிலை எப்போதும் அமைதியாக இருக்கும். அதை நாங்கள் கவனித்தோம், மற்றும் அவர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினருடன் நல்ல உடன்பாட்டில் இருந்தார்.

2023 ஐபிஎல் தொடர் IPL முடிந்தவுடன், நீ தான் அடுத்த ஆண்டு கேப்டன்' என்று கூறிவிட்டேன். தற்போதும் கூட பலர் என்னை 'நிழல் கேப்டன்' என்று கூறினார்கள், ஆனால் உண்மையில் 99% முடிவுகளை அவரே எடுத்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன், ஆனால் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளும் அவருடையதுதான். அவர் மிக சிறப்பாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று தோனி கூறினார்.
தனது கிரிக்கெட் முறையைத் தொடர்ந்து மாற்றிக்கொள்வதற்கான அவசியம் குறித்து பேசிய தோனி,
"2008ல் எப்படி T20 ஆடினோம். 2024ல் எப்படி ஆடுகிறோம்-இதில் பெரும் வேறுபாடு உள்ளது. மைதானங்கள் மாறிவிட்டன.பந்தின் தன்மையும் மாறிவிட்டது, தற்போது அதிகம் ரன்கள் வருகிறது. அதேசமயம், பேட்ஸ்மேன்கள் புதிதாக முயற்சிக்கிறார்கள், நவீன ஷாட்களை ஆட முயற்சிக்கிறார்கள். இதனால் நானும் மாற வேண்டும், இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது என்று கூறினார்.
இதே போன்று விராட் கோலியுடன் இருக்கும் உறவைப் பற்றி பேசிய தோனி, விராட் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவான், வெறும் 40-60 ரன்கள் எடுத்தால் திருப்தியடைய மாட்டார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தினார். ஆரம்பத்தில் அவர் ஒரு இளம் வீரராக இருந்தபோதும், எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடந்தன. தற்போது இருவரும் கேப்டன் இல்லை, எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது. ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் உள்ளது என்று கூறினார்.
போஜ்பூரி கிரிக்கெட் வர்ணனை குறித்து பேசிய தோனி, நான் அதிகமாக பிராந்திய மொழிகளில் கமெண்டரி கேட்கவில்லை, ஆனால், பிஹாரி (போஜ்புரி) கமெண்டரி பழைய காலத்து வானொலி கமெண்டரியை நினைவுபடுத்துகிறது, அதில் கமெண்டேட்டர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாட்டை விவரிப்பார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக தோன்றுகிறது. எவரும் தங்கள் தாய்மொழியில் விளையாட்டைப் பார்க்க விரும்புவார்கள், அதில் ஒரு தனி உணர்வு இருக்கும் என்றார்.
தனது பிரியமான மைதானம் குறித்து கேட்டபோது பதில் அளித்த தோனி சேப்பாக்கம் என்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் மைதானம், ஏனெனில் ரசிகர்கள் விசிலுடன் மிகவும் அதளிக்கிறார்கள். ஆனால் இதற்குப் பிறகு என்னை அதிகமாக கவர்ந்த மைதானங்களை தேர்வு செய்வது கடினம். மும்பைக்கு எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. 2007ல் நாம் T20 உலகக் கோப்பையை வென்றபோது, இங்கு வந்தோம், மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியும் மும்பையில்தான் நடந்தது, எனவே அது என் மனதில் ஒற்றுமை ஏற்படுத்தியது. அதேசமயம், பெங்களூருவில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை உருவாக்குகிறார்கள், கொல்கத்தாவில் மிகப்பெரிய மைதானம் இருப்பதால் முழு ரசிகர்கள் அதுவே ஒரு அலாதியான உணர்வை தருகிறார்கள். அகமதாபாத்தும் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைதானமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நகரமும் தனித்துவமான பாராட்டுகளை வழங்குகிறது, எனவே நான் ஒரே ஒரு மைதானத்தை மட்டும் தேர்வு செய்வது கடினம் என்று தோனி கூறினார்.