Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இதுவரை தோனி செய்த ஐபிஎல் சாதனைகள்.. ரன்கள், விக்கெட் கீப்பிங் ரெக்கார்டு, கேப்டன்சி சாதனை

சென்னை: தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் குவித்த ரன்கள், விக்கெட் கீப்பிங் செய்த சாதனைகள் மற்றும் அவர் செய்த ஐபிஎல் சாதனைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். ஐபிஎல் தொடர் துவங்கிய ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 17 ஆண்டுகளாக தோனி ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார்.

இந்த 17 ஆண்டுகளில் இரண்டு அணிகளுக்காக அவர் விளையாடியிருக்கிறார். 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக தோனி விளையாடினார். மற்ற 15 ஆண்டுகளும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

IPL 2025 MS Dhoni s IPL Career Runs Records and Achievements

தோனி இந்த 17 ஆண்டுகளில் மொத்தமாக 264 ஐபிஎல் போட்டிகளில் 5243 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும். அவரது சராசரி 39.12 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 137.53 ஆகும். 24 அரை சதங்களை அடித்து இருக்கிறார். 363 பவுண்டரி மற்றும் 252 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். விக்கெட் கீப்பராக 152 கேட்சுகளையும் 42 ஸ்டம்பிங்குகளையும் செய்து இருக்கிறார்.

தோனியின் ஐபிஎல் சாதனைகள்:

தோனி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். மொத்தம் 264 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ரோஹித் சர்மா உடன் இணைந்து கேப்டனாக அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்று முதல் இடத்தில் இருக்கிறார். இருவரும் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் தோனி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மொத்தம் 4669 ரன்களை சிஎஸ்கே அணிக்காக மட்டும் அவர் சேர்த்து இருக்கிறார்.

தோனி ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார். இதுவரை 226 ஐபிஎல் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட் வீழ்ச்சிகளை செய்துள்ளார். மொத்தம் 194 விக்கெட் வீழ்ச்சிகளை செய்து இருக்கிறார் தோனி.

மேலும் ஐபிஎல் கோப்பையை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் தோனியை மட்டுமே சேரும். 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி தோனி தலைமையில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது. அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது.

Story first published: Monday, March 17, 2025, 20:30 [IST]
Other articles published on Mar 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+