Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: முதலிடம் பிடிக்க போவது யார்? குஜராத், மும்பை பலப்பரீட்சை.. தமிழக வீரர் வாசிங்டன் நீக்கம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 56வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் titans அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்வார்கள். இந்த நிலையில் டாஸ் வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், நாங்கள் முதலில் பந்து வீசப் போகின்றோம்.

GT vs MI

ஆடுகளம் பெரிய அளவு மாறாது என்று நினைக்கின்றேன். முதலில் எந்த இலக்கை நாங்கள் எட்ட போகிறோம் எனத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அதனை சேஸ் செய்வது நல்லது என்று நினைக்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்பட முயற்சி செய்கின்றோம். எங்கள் அணியில் இன்று வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அர்ஷத் கான் களமிறங்குகிறார்.

ரபடா எங்களுடன் தான் பயிற்சி செய்து வருகிறார். எனினும் அவருக்கு சில நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டிய நிலை இருக்கின்றார். சாய் கிசோர் போன்ற வீரர் எங்கள் அணியில் இருப்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன். எங்கள் அணியில் ஆறு முதல் ஏழு பௌலிங் ஆப்ஷன்கள் எங்களுக்கு இருக்கின்றது என்று கில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய கவலைப்படவில்லை. மும்பையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காற்று அதிகமாக வீசுகிறது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசுவது நல்ல முடிவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டத்தை சரியான முறையில் களத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

ஐபிஎல் தொடரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு வந்து ஆட்டத்தை மாற்ற முடியும். திட்டத்தை நாம் தொடர்ந்து பாலோ செய்ய வேண்டும். 20 ஓவர்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் கவனத்துடன் தொடர்ந்து செயல்படுவது முக்கியம். நாங்கள் எங்கள் அணியின் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 6, 2025, 19:26 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+