For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ராஜா வருகிறார்.. ஒதுங்கி நில்லுங்க! குவாலிபையர் 2-க்கு மும்பை தகுதி.. குஜராத் நாக் அவுட்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இதன் மூலம் மும்பை அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப்புடன் மும்பை பலப் பரிசை நடத்துகிறது. சந்திகாரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது

இந்த சீசனில் ரோகித் சர்மா சிஎஸ்கே சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் விளாசிய நிலையில் மற்ற ஆட்டங்களில் எல்லாம் பெரிய அளவு சாதிக்கவில்லை. 14 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 389 ரன்கள் அடித்திருந்தார்.

Mumbai Indians Beat Gujarat titans

இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய அபார அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று ஆட்டத்தில் வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் போன்ற வீரர்கள் இடம் பெறாத நிலையில் புதிய வீரராக இங்கிலாந்து அணியின் ஜானி பாரிஸ்டோ விளையாடினார்.

ஜானி பாரிஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஒரு புறம் சூரியகுமார் யாதவ் சிக்ஸர்களை பறக்க விட ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சூரியகுமாரி யாதவ் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 33 எடுத்தார். மறுபுறம் ரோகித் சர்மா 28 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். இளம் வீரர் திலக் வர்மா மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.

சதம் அடிப்பார் என ரோகித் சர்மா எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருடைய பேட்டிங்கில் 9 பவுண்டரி நான்கு சிக்ஸர் அடங்கும். இறுதியில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் அளப்பருக்கு 228 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கேப்டன் கில், பவுல்ட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன், குசல் மெண்டீஸ் அதிரடியாக விளையாடினர்.

குஷல் மெண்டிஸ் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி எடுத்து அதிரடி காட்டிய நிலையில் ஹிட் விக்கெட் ஆகி 20 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக விளையாடி குஜராத் அணியின் மானத்தை காப்பாற்றினர். சாய் சுதர்சன் 28 பந்துகளில் அரை சதம் விளாச, அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

வாஷிங்டன் சுந்தரனின் விக்கெட் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடைசி வரை போராடிய சாய் சுதர்சன் 49 பந்துகளின் 80 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அழிக்க முடியாமல் தடுமாறினர் இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 2082ல் எடுத்தது இதன் மூலம் மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, May 30, 2025, 23:45 [IST]
Other articles published on May 30, 2025
English summary
IPL 2025- Mumbai Indians Beat Gujarat titans by 10 runs and Will Play in Qualifier 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+