Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: முதல் ஓவரிலேயே குஜராத்தின் ஃபியூஸை புடுங்கிய மும்பை இந்தியன்ஸ்.. கேப்டன் கில் காலி

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று எலிமினேட்டர் போட்டியில் பலம் வாய்ந்த குஜராத்தை எதிர்கொண்டது. நாக் அவுட் போட்டி என்பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த சூழலில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.

50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 81 ரன்கள் சேர்க்க, ஜானி பாரிஸ்டோ 22 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் டாப் மூன்று வீரர்கள் தான். இதில் பட்லர் இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்காக சென்றுவிட்டார்.

Shubman gill vs trent boult

இதனால் அந்த அணியில் வெற்றி சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோரை நம்பியே இருந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு அபாரமாக ரன்களை சேர்த்து வந்தனர். குறிப்பாக நடப்பு சீசனில் மட்டும் 210, 205, 120 ,114 என நான்கு முறை 100 ரன்ளுக்கு மேல் சேர்ந்து அடித்து இருக்கிறார்கள். வெறும் ஒருமுறைதான் ஒற்றை இலக்கம் ரன்களில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்து இருக்கிறது.

அந்த வகையில் பலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் விளங்கி இருக்கிறார்கள். இதனால் இந்த ஜோடியை விரைவாக பிரிக்க வேண்டும் என்று மும்பை அணி திட்டம் போட்டது. மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பவுல்ட், கையில் பந்து வந்தவுடன் அவர் இருவருக்குமே ஸ்டம்பை நோக்கி பந்தை வேகமாக இன்சுவிங் செய்தார்.

இதன் மூலம் இரு வீரர்களும் எல்பி டபிள்யு ஆவார்கள் என பவுல்ட் கணக்கு போட்டார். அதே போல் குஜராத் அணியின் கேப்டனான கில் ஆட்டத்தின் நான்காவது பந்திலே ஒரு ரன்கள் எடுத்திருந்த நிலையில் பௌல்ட் பந்துவீச்சில் lbw ஆனார். இதன் மூலம் குஜராத் அணி முதல் விக்கெட்டுக்கு வெறும் மூன்று ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் வீரர் என்ற சாதனையை ட்ரெண்ட் போல்ட் வைத்திருக்கிறார். இதுவரை முதல் ஓவரில் மட்டும் 32 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் புவனேஸ்வர் குமார் 27 விக்கெட்டுகளையும், மூன்றாவது இடத்தில் பிரவீன் குமார் மற்றும் தீபக்சாகர் ஆகியோர் தலா 15 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள்.

Story first published: Friday, May 30, 2025, 22:31 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+