Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தொடர்ந்து 4 வெற்றி.. இனி மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தும்..கேப்டன் ஹர்திக் சூளுரை

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து போட்டிகளில் வரும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் அடுத்த நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ரோகித் சர்மா என அனைத்து வீரர்களும் தற்போது நல்ல பார்முக்கு திரும்பிருக்கிறார்கள். ட்ரெண்ட் பவுல்ட், தீபக் சாகர் போன்றவர்கள் கூட ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

Hardik Pandya

இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த வெற்றி நிச்சயம் மகிழ்ச்சியை தருகின்றது. எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சரியான திசையில் செல்கிறார்கள். நான் எப்போதுமே நினைப்பதுண்டு. எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது திறனை வெளிப்படுத்தினால் மும்பை அணி இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும்.

தீபக், பவுல்ட் ஆகியோர் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மாவும் சூரியக்குமாரும் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள். எனவே இது சிறந்த வெற்றி என்று கருதுகின்றேன். தீபக் சாகரை தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீச வைப்பது எந்த ஒரு பின்னணியும் இல்லை. என் மனதில் தோன்றியதை நாம் செய்கின்றேன். சில சமயம் கேப்டன்சி என்பது உள்ளுணர்வு படி செயல்பட வேண்டும்.

களத்தில் நடப்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் அவர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசுகிறார். அப்படி இருக்கும் போது ஏன் தொடர்ந்து நான்கு ஓவர்கள் கொடுக்கக்கூடாது என்ற ஒரு ஐடியா தான். இன்னும் சில துறைகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது இருக்கிறது.தற்போது வரை எங்கள் அணி திருப்திகரமாக தான் அமைந்துள்ளது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 23, 2025, 23:55 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+