IPL 2025: மும்பை செய்த ஏமாற்று வேலை.. குஜராத்தை தோற்கடிக்க குறுக்கு வழி.. சூர்யகுமார் செய்ததை பாருங்க
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் எலிமினேட்டர் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் பலப் பரிட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கி குஜராத் அணி கேப்டன் கில் விக்கெட்டை இழந்தாலும் பின் சாய் சுதர்சன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வெற்றி அருகே வந்தது.
எனினும் இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் குஜராத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில் குஜராத் அணி அதிரடியாக ஆடி மும்பைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இந்த தருணத்தில் வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக மும்பை அணி குறுக்கு வழியை கையாண்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன்படி சாய் சுதர்சனும் வாசிங்டன் சுந்தரும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை அணி தடுமாறியது.
அப்போதுதான் இந்த ஜோடியை பிரிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய உத்வேகத்தையும் கவனத்தையும் சிதறடிக்க வேண்டும் என்பதற்காக மும்பை அணி குறுக்கு வழி ஒன்றை கடைப்பிடித்தது. பொதுவாக கிரிக்கெட்டில் ஒரு ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுடைய கவனத்தை சிதறடிக்கும் விதமாக எதிரணி வீரர்கள் காயம் அடைந்தது போல் களத்தில் நாடகம் ஆடுவார்கள்.
இதன் மூலம் அவருக்கு களத்தில் சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் வருவார்கள். இதனால் ஆட்டம் நேரம் தடைபடும். இதன் மூலம் வீரர்களின் கவனம் சிதறும். தற்போது இதே தான் மும்பை அணியும் பயன்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தபோது சூரியகுமார் யாதவ் வேண்டும் என்றே காயமடைந்ததாக நாடகமாடினார்.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் போட்டி தொடங்கியதும். வாஷிங்டன் சுந்தர் கவனச் சிதறல் காரணமாகும் ஆட்டம் இழந்தார். இதேபோன்று சாய் சுதர்சன் அடுத்த சில ஓவர்களில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் குஜராத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications