Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- பந்து ஸ்விங் ஆனது நின்றதால், இதை செய்தேன்.. 3 விக்கெட் வீழ்த்திய KKR வீரர் வைபவ் கருத்து

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா சன்ரைசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கே கே ஆர் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியை 200 ரன்கள் எடுத்து விட்டால், சன்ரைசர்ஸ் அணி இந்த இலக்கை மிக விரைவில் எட்டி விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய கொல்கத்தா வீரர் வைபவ் அரோரா அபாரமாக பந்து வீசி சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Vaibhav arora

29 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இன்றைய போட்டியில் பந்து வீசும் முறை குறித்து அவர் பேசியதை தற்போது பார்க்கலாம். நான் இன்று இம்பேக்ட் வீரராக தான் விளையாட போகிறேன் என்று முன்பே தெரியும். அதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். போட்டியின் போது பந்து என்ன செய்கிறது என்று நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பந்து எவ்வளவு நேரம் ஸ்விங் ஆகிறது என்பதை பார்த்தேன். ஐந்து ஆறு ஓவருக்கு பின் பந்து கொஞ்சம் கூட ஸ்விங் ஆவது கிடையாது. இதனால் கட்டர், யாக்கர்ஸ் போன்ற பந்துவீச்சு வகையை நான் கற்றுக் கொண்டு அதை வீசினேன். கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது பேட்ஸ்மேன்களும் பெரிய ஷாட்களை ஆடி வருகிறார்கள். இதன் காரணமாக கட்டர்ஸ் யாக்கர்ஸ் என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் இந்த போட்டிக்கு முன்பு எந்த வீரருக்கு, எந்த மாதிரி பந்து வீசவேண்டும் என்பதை ஆலோசித்து தீர்மானித்தோம்.

அதை களத்தில் வந்து செயல்படுத்தினோம். நாங்கள் பவர் பிளேவில் நல்ல முறையில் பந்து வீசினால், நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதன் பிறகு விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை போட்டிக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று தெரியும். எனவே நாங்கள் முதல் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க நினைத்தோம். அதன் பிறகு போட்டி சுலபமாக மாறிவிடும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். அதேபோல் நடந்தது என்று வைபவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 4, 2025, 8:01 [IST]
Other articles published on Apr 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+