Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB எதிராக விளையாடிய போது உணர்ச்சி வசப்பட்டேன்.. இந்த 2 பேர் தான் என் பவுலிங்கிற்கு காரணம்- சிராஜ்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்காக முதல் முறையாக விளையாடிய சிராஜ் ஒரு மாபெரும் சம்பவம் ஒன்றை செய்து இருக்கிறார். அதாவது சிராஜ் பல ஆண்டுகளாக ஆசிபி அணிக்காக விளையாடினார்.

ஆனால் ஆர் சி பி அணி அவரை தக்க வைக்காமல் அணியை விட்டு நீக்கியது. இதனால் கடுப்பான சிராஜ் தற்போது ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது தனது கோபத்தை பந்து வீச்சில் வெளிப்படுத்தி அசத்தினார். இதன் மூலம் நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சிராஜ் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Mohammed siraj

இதன் மூலம் முஹமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ், இன்று நான் ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். ஏனென்றால் நான் ஆர்சிபிக்காக 7 ஆண்டுகள் விளையாடிருக்கின்றேன். இதன் காரணமாக இன்று ஆட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்படும் செய்தேன்.

ஆனால் பந்து என் கைக்கு வந்தவுடன் அனைத்தும் மாறியது. போட்டியில் நான் இருக்கிறேன் என்பதை என்னுடைய பந்துவீச்சு மூலம் காட்ட விரும்புகின்றேன். நான் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகன். அவரைப் போல் தான் நான் கொண்டாடுவேன். நான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்ததால் நான் என்ன தவறு செய்கிறேன் என்று எனக்கு தெரியாமல் இருந்தது.

ஆனால் எனக்கு கிடைத்த பிரேக்கில் என்னுடைய பந்துவீச்சு உடல் தகுதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நான் கவனம் செலுத்தினேன். நான் குஜராத் அணியில் இணைந்தவுடன் நெஹ்ரா உடன் அதிகம் பேசினேன். தற்போது பந்துவீச்சு நன்றாக வருகிறது. நெஹ்ரா என்னுடைய பவுலிங்கை என்ஜாய் செய்ய சொன்னார். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று சுதந்திரம் அளித்தார்.

இதேபோன்று ரபாடா, இஷாந்த் ஷர்மா போன்ற பவுலர்களிடமும் பேசி அவர்களிடம் பல அறிவுரைகளை பெற்றுக் கொள்கின்றேன். இது எனக்கு உதவிகரமாக இருக்கின்றது. ஒரு பவுலராக இருக்கும் எனக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சில் ரன்கள் சென்றால் நாம் பதற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் நம்மால் நன்றாக பந்து வீச முடியும் என்று நம்பிக்கை எப்போதுமே இருக்க வேண்டும் என்று சிராஜ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 3, 2025, 7:30 [IST]
Other articles published on Apr 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+