Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அதே போட்டியில் மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை வென்ற பூரான்.. லக்னோ அணிக்கு 4வது வெற்றி

மும்பை: ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாய் சுதர்சன் வழக்கம்போல் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி ரன்களை குவித்தார்.

LSG VS GT

37 பந்துகளில் 56 ரன்களை சாய் சுதர்சன் அடித்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். நடப்பு சீசனில் சாய் சுதர்சன் அடித்திருக்கும் நான்காவது அரைசதம் இதுவாகும். மறுபுறம் கில் 38 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. எனினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க குஜராத் அணி பேட்டிங் சரிவை நோக்கி சென்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 16 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ருத்தர்போர்ட் 22 ரன்கள் சேர்க்க ஷாருக்கான் 11 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. சர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை அடுத்து லக்னோ அணி களமிறங்கியது. இதில் கேப்டன் பண்ட் இன்று தொடக்க வீரராக களம் இறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார். ஏய்டன் மார்க்கரம் வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்துகளில் அவர் 58 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21 ரன்களில் வெளியேறினார். இந்த சூழலில் மூன்றாவது வீரராக விளையாடிய நிக்கோலஸ் பூரான் மீண்டும் தன்னுடைய அதிரடியை வெளி காட்டினார். இந்த ஆட்டத்தில் சாய் சுதர்சன் அரைசதம் அடித்ததால் நிக்கோலஸ் பூரானிடம் இருந்த ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு சென்றது.

இதனை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடிய பூரான் 34 பந்துகளில் எல்லாம் 62 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் அதே போட்டியில் சாய் சுதர்சனிடமிருந்து மீண்டும் நிக்கோலஸ் பூரான் ஆரஞ்சு தொப்பியை வாங்கி அசத்தினார். அதேபோன்று ஆயுஸ் பதோனி 28 ரன்கள் எடுக்க லக்னோ அணி 19.3 ஓவரில் எல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.

Story first published: Saturday, April 12, 2025, 20:00 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+