Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RR: தெறிக்கவிட்ட நிதிஷ் ரானா.. யாக்கர்களை போட்டு திருப்பி கொடுத்த பதிரானா.. சிஎஸ்கேக்கு சவால்

கவுகாத்தி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய 11-வது லீக் ஆட்டம் கவுஹாத்தியும் நடைபெற்றது. ஆர்சிபி அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், சிஎஸ்கே அணி ஒருநாள் இடைவெளியில் இந்த போட்டியில் பங்கேற்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

CSK vs RR

இதேபோன்று சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் நூர் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் தடுமாறிய நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் நிதிஸ் ரானா வெறிகொண்டு விளையாடி சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

36 பந்துகளை எதிர்கொண்ட நிதிஷ் ரானா 81 ரன்களை சேர்த்தார். இதில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர் அடங்கும். நிதிஷ் ராணாவின் ஸ்டரைக் ரேட் 225 என்ற அளவில் இருந்தது.நிதிஷ் ரானாவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இன்றும் சிஎஸ்கே அணி 200க்கும் மேல் சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என நினைத்தனர்.

ஆனால் அதன் பின் சிஎஸ்கே வீரர்கள் அபாரமாக பந்து வீசி ராஜஸ்தான் ரன் குவிப்புக்கு அணை கட்டினர். கேப்டன் ரியான் பராக் 37 ரன்களிலும், ஹசரங்கா நான்கு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் சிம்ரன் ஹெட்மயர் 19 ரன்கள் எடுத்து பதிரானா பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் ஆனார். இந்த நிலையில் பதிராணா அபாரமாக பந்து வீசி யாக்கர்களை போட்டு ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

இதேபோன்று கலீல் அகமதும் அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் வீரர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதனால் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி கடைசி ஐந்து ஓவரில் வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் கலீல் அகமது, நூர்அகமது 16 ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி கடந்த ஆறு ஆண்டுகளாக 180 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸ் செய்ததில்லை என்ற ஒரு சோகமான சாதனை இருக்கிறது. அதனை இன்று சிஎஸ்கே முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, March 30, 2025, 21:37 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+