For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025- நடராஜன்,புவனேஸ்வர் குமார் கிடையாது.. CSK வாங்க போகும் வேகப்பந்துவீச்சாளர்கள் இவங்க தான்!

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம் என்பது குறித்து இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய வேகப்பந்து வீச்சின் பலத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சிஎஸ்கே அணி தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இந்திய வேக பந்துவீச்சாளர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.

ipl 2025 csk ms dhoni

பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ் போன்ற வீரர்களை வாங்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணி எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளம் வேகம் பந்துவீச்சாளர்களையே குறிவைத்து வாங்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது.

அதன்படி சிஎஸ்கே வின் விருப்பப்பட்டியலில் யார் இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரசித் கிருஷ்ணா. ஆர் சி பி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக பிரசித் கிருஷ்ணா ஏற்கனவே விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் உடையவர். தன்னுடைய உயரத்தால் எத்தகைய பேட்ஸ்மேன்களையும் நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடிய பிரசித் கிருஷ்ணாவை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யலாம்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் யாஷ் தாக்கூர். லக்னோ அணிக்காக விளையாடும் யாஷ் தாக்கூர், அதிவேகமாக பந்துகளை வீசக்கூடியவர். தோனி போன்ற ஒரு வழிகாட்டி இருந்தால் நிச்சயம் அவர் மிகப்பெரிய வீரராக உருவாக்கலாம். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மத்வால்.

மும்பை அணியில் மத்வால் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவர் நடப்பு ஏலத்தில் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய காஷ்மீரை சேர்ந்த ராசிக் சலாம். வேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிக்கும் ராசிக் சலாம் அண்மையில் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

இதனால் ராக்ஷிப் சலாமை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க முயற்சி செய்யும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் தற்போது அனைத்து செய்தித்தாள்களிலும் இடம் பிடித்த அன்சூர் கம்போஜ். இவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அண்மையில் ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனால் இவரையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் தேர்வு செய்யலாம்.

Story first published: Tuesday, November 19, 2024, 18:29 [IST]
Other articles published on Nov 19, 2024
English summary
IPL 2025- No Natarajan and Bhuvaneshwar kumar - CSK is going to buy Young Fast bowlers நடராஜன்,புவனேஸ்வர் குமார் கிடையாது.. CSK வாங்க போகும் வேகப்பந்துவீச்சாளர்கள் இவங்க தான்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+