Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இல்லை.. மும்பை அணி வீரரை மாற்றி கொள்ள சிஎஸ்கே விருப்பம்.. ராஜஸ்தானிடமும் பேரம்

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது முழு வீச்சில் அடுத்த சீசனுக்கு தயாராகி வருகிறது. கடந்த முறை ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் சிஎஸ்கே அணி இருக்கிறது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மும்பை போல் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த வீரர்களை தக்க வைக்கலாம் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்பதில் அந்த அணி தெளிவாக இருக்கிறது. எனினும் எதிர்காலத்தை மையமாக வைத்து சிஎஸ்கே அணி மற்ற அணியில் இருக்கும் சில வீரர்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ipl 2025 ipl retention cricket csk

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் இளம் அதிரடி வீர திலக் வர்மாவை சிஎஸ்கே அணி வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது. திலக் வர்மா ஏலத்தில் வரும் போது அவரை எடுப்பதற்காக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக மோதி இருந்தது. எனினும் மும்பை அணி திலக் வர்மாவை கைப்பற்றியது.

இந்த சூழலில் திலக் வர்மாவை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று முயற்சியில் சிஎஸ்கே இருக்கிறது. இதற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவுக்கு நல்ல மாற்று வீரராக திலக் வருமா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஆல் ரவுண்டர்களை தேடுகிறது. இதனால் சிஎஸ்கே அணி தங்களிடம் இருக்கும் சிவம் துபே அல்லது ராஜவர்தன் ஹங்கேற்கர் ஆகியோரை அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக திலக் வர்மாவை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறது.

ஒரு வேலை இதுக்கு மும்பை அணி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை ஏலத்தில் எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. இதேபோன்று ராஜஸ்தான் அணியிடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனியாக ஒரு பேரத்தை பேசி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதன்படி சிவம் துபே, ராஜவர்தன் ஹங்கர்கேகர் ஆகியோரை வழங்கிவிட்டு சஞ்சு சாம்சனை எடுத்துக் கொள்ள யோசித்து வருகிறது. ஆனால் இது பகல் கனவாக தான் சிஎஸ்கேவுக்கு அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் சிஎஸ்கே போன்ற பெரிய அணிகள் நினைத்தால் ஐபிஎல் தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் வரும் டிசம்பர் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 27, 2024, 16:30 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+