For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025 - Uncapped விதி மாற்றம்.. தோனி மட்டுமல்லாமல் மேலும் 2 வீரர்கள் பயன்பெற வாய்ப்பு

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைக்கும் முறையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு uncapped வீரரை தக்கவைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரரை தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் நடப்பு மெகா ஏலத்தில் uncapped வீரர் விதியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை பிசிசிஐ கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இந்திய அணிக்காக கடைசி ஐந்து ஆண்டுகளில் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத வீரரை uncapped வீரராக கருதலாம் என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

ipl 2025 ipl retention ms dhoni csk 2025

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி uncapped வீரராக கருதப்படுவார். இதனால் தோனிக்காக இந்த விதியை பிசிசிஐ மாற்றிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தோனி மட்டும் இந்த விதியால் பயன்பெற போவதில்லை. மேலும் இரண்டு இந்திய அணி வீரர்கள் uncapped வீரராக அறியப்பட போகிறார்கள்.

அது யார் என்று தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பியூஸ் சாவ்லாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆனால் இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடியது 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் தான்.

இதனை அடுத்து கடந்த 12 ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும் பியூஸ் சாவ்லா தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் கூட பியூஸ் சாவ்லா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 11 போட்டியில் விளையாடும் 13 விக்கெட்களும், 2023 ஆம் ஆண்டு சீசனில் மும்பைக்காக 16 போட்டிகள் விளையாடி 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

இதனால் சாவ்லாவுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவும் இந்த புதிய விதி மூலம் பயன்பெறப் போகிறார். சந்தீப் ஷர்மா இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் கடைசியாக இந்திய அணிக்கு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு 9 ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. எனினும் சந்திப் ஷர்மா இன்னும் ஓய்வு பெறவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சந்திப் சர்மா 13 விக்கெட்களும், 2023 ஐபிஎல் சீசனில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். புதிய விதி மூலம் சந்தீப் சர்மாவும் பயன்பட போகிறார்.

Story first published: Sunday, September 29, 2024, 20:12 [IST]
Other articles published on Sep 29, 2024
English summary
IPL 2025 - Not only MS Dhoni - 2 other Indian cricketers will benefit from uncapped rule IPL 2025 - Uncapped விதி மாற்றம்.. தோனி மட்டுமல்லாமல் மேலும் 2 வீரர்கள் பயன்பெற வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+