Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 KKR vs RCB: கடைசி நேர ட்விஸ்ட்.. ஷாரூக் கான், பிசிசிஐ செம ஹேப்பி.. ஒதுங்கி வழிவிட்ட மழை

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடர் கோலாகலமாக துவங்கி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி மழையால் தடைபடும் என வானிலை அறிக்கை சுட்டிக்காட்டிய நிலையில், தற்போது போட்டி நடைபெற உள்ள கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்யவில்லை.

இதை எடுத்து துவக்க விழா திட்டமிட்ட நேரத்தில் நடந்தது. துவக்க விழாவுக்காக ஏற்பாடுகளை செய்து இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் மழையின் காரணமாக பதற்றத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் துவக்க விழாவை முன் நின்று நடத்த இருந்த நிலையில், அவரும் மழை வராததால் நிம்மதி அடைந்தார்.

IPL 2025 Opener KKR vs RCB Goes Ahead as Rain Stays Away Opening Ceremony Highlights

மேலும், கொல்கத்தா - பெங்களூரு போட்டி நடைபெறும் நேரத்திலும் மழை பெய்யாது என தற்போது கூறப்படுகிறது. இதை அடுத்து வானிலை இணையதளங்களில் மழை குறித்த தகவலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது எனவும், லேசான மழை பெய்வதற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது.

இதை அடுத்து ஐபிஎல் போட்டிகளை காண்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை ஷாருக் கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பதை தாண்டி துவக்க விழாவை முன்னின்று நடத்தினார். மேலும், ஸ்ரேயா கோஷல் சில பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். திஷா பதானி பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதை அடுத்து திட்டமிட்டபடி 2025 ஐபிஎல் தொடர் உற்சாகத்துடன் தொடங்கியது. இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்படுகிறார். அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ராஜத் படிதார் செயல்பட இருக்கிறார். அதனால் இரண்டு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட உள்ளன.

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் தொடக்கப் போட்டி கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
  • மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் போட்டி திட்டமிட்டபடி நடக்கிறது.
  • ஷாருக் கான் முன்னிலையில் ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியுடன் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ராஜா படித்தாரும் செயல்படுகின்றனர்.
  • இரு அணிகளிலும் புதிய வீரர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம்பெற்றுள்ளதால் புதிய வியூகங்களுடன் களமிறங்குகின்றன.
Story first published: Saturday, March 22, 2025, 18:41 [IST]
Other articles published on Mar 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+