For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KKR vs RCB: டாஸ் வென்றது யார்? பிளேயிங் 11 முழு விவரம்.. எந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது?

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்றது. அந்த அணியின் புதிய கேப்டனான ரஜத் படிதார் டாஸ் வெற்றியுடன் தனது பயணத்தை துவக்கினார்.

ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் முடிவு பற்றி ரஜத் படிதார் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். இந்த பிட்ச் மிகவும் கடினமானதாக உள்ளது. ஆர்சிபி அணியை வழி நடத்துவது அற்புதமாக உள்ளது. மிகச்சிறந்த வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் கடந்த பத்து, பதினைந்து நாட்களாக சரியான முறையில் ஐபிஎல் தொடருக்காக தயாராக இருக்கிறோம். நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க இருக்கிறோம்" என்றார்.

IPL 2025 Opener KKR vs RCB Toss Update and Playing 11

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் களம் இறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 முறை வெற்றி பெற்று உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 191 ரன்கள் எடுத்து இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

Story first published: Saturday, March 22, 2025, 19:34 [IST]
Other articles published on Mar 22, 2025
English summary
IPL 2025 Opener KKR vs RCB Toss Update and Playing 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+