Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஐபிஎல் தொடரின் முதல் போட்டி எப்போது? இலவசமாக பார்க்க முடியுமா? KKR vs RCB மேட்ச்

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டியின் ஒளிபரப்பு நேரம், எப்படி பார்ப்பது? ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியுமா? என்பது பற்றி பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வு 7 மணிக்கு நடைபெறும்.

IPL 2025 Opening Match Time and Telecast Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru on March 22

அதற்கு முன்பு துவக்க விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து போட்டி நடைபெறும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.

மொபைல் மற்றும் இணையத்தில் இந்த போட்டியை காண விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் இந்த போட்டிகளை காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க முடியாது. ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க விரும்புபவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குப் பிறகு தங்களின் ஜியோ எண்ணுக்கு ரூபாய் 299 அல்லது அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

2024 ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றிய நிலையில், அந்த அணி முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் மிரட்டும் மிஸ்டரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என பலமான அணி ஒருபுறம். நட்சத்திர வீரரான விராட் கோலி இடம் பெற்று இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மறுபுறம் என முதல் போட்டியே கொண்டாட்டமாக மாறி உள்ளது.

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்குகிறது.
  • முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
  • போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். டாஸ் 7 மணிக்கு நடைபெறும்.
  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையிலும், ஜியோ சினிமாவில் ஆன்லைனிலும் பார்க்கலாம்.
  • ஜியோ சினிமா இலவசமாக பார்க்க ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் அல்லது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா அவசியம்.
Story first published: Thursday, March 20, 2025, 20:52 [IST]
Other articles published on Mar 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+