For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025 அதிக ரன், அதிக விக்கெட் - ஊதா தொப்பியை வென்ற சிஎஸ்கே வீரர்.. ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் தற்போது யார், யார் வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் நான்கு போட்டிகளில் 201 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது சராசரி 50.25 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் நம்பமுடியாத வகையில் 218.47 என்பதாக உள்ளது. அவர் தற்போது அரஞ்சு தொப்பியை தக்க வைத்துள்ளார்.

IPL 2025 Orange and Purple Cap Holders After 20 Matches

நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் 28 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் 5 போட்டிகளில் 199 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது சராசரி 66.3 என்பதாக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில் அவர் தற்போது 191 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கான வாய்ப்பு விராட் கோலிக்கு இருப்பதாக பலரும் நம்பும் நிலையில் அவர் தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவர் நான்கு போட்டிகளில் 164 ரன்கள் எடுத்து இருக்கிறார். அதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் சிறப்பாக ஆடிவரும் நிலையில் அவரும் நான்கு போட்டிகளில் 161 ரன்கள் எடுத்து ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வெறும் மூன்று போட்டிகளில் 159 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 159 ஆக உள்ளது. அதாவது ஒருமுறை மட்டுமே அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார் அதனால் அவரது சராசரி அதிகமாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 206 என்பதாக உள்ளது. அவர் அடுத்த போட்டியிலும் அரை சதம் அடித்தால் நிச்சயமாக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரணை முந்தி முதலிடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்தில் இருக்கிறார். அவர் ஐந்து போட்டிகளில் 152 ரன்கள் எடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா பத்தாவது இடத்தில் 151 ரன்கள் உடன் இருக்கிறார். அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட முதல் 10 இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம். இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நூா் அகமது முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது எக்கானமி 7.86 என்பதாக உள்ளது. அவர் தற்போது ஊதா தொப்பியை தக்க வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா அவருக்கு போட்டியாளராக வந்துள்ளார். அவரும் நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது எக்கானமி 8.57 என்பதாக உள்ளது. மூன்றாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜ் இருக்கிறார். அவர் நான்கு போட்டிகளில் 9 விக்கெட்களை வைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் எட்டு விக்கெட்டுகள் உடனும், ஆறாவது இடத்தில் சிஎஸ்கே அணியை சேர்ந்த கலீல் அகமது எட்டு விக்கெட்டுகள் உடனும் இடம்பெற்றுள்ளனர்.

  • சூரியகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 5 போட்டிகள் - 199 ரன்கள் - 66.33 சராசரி - 151.90 ஸ்ட்ரைக் ரேட்

  • சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் - 191 ரன்கள் - 47.75 சராசரி - 150.39 ஸ்ட்ரைக் ரேட்

  • மிட்செல் மார்ஷ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 4 போட்டிகள் - 184 ரன்கள் - 46.00 சராசரி - 185.85 ஸ்ட்ரைக் ரேட்

  • ஜோஸ் பட்லர் (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் - 166 ரன்கள் - 55.33 சராசரி - 167.67 ஸ்ட்ரைக் ரேட்

  • விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 4 போட்டிகள் - 164 ரன்கள் - 54.66 சராசரி - 143.85 ஸ்ட்ரைக் ரேட்

  • ரஜத் படிதார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 4 போட்டிகள் - 161 ரன்கள் - 40.25 சராசரி - 175.00 ஸ்ட்ரைக் ரேட்

  • ஸ்ரேயாஸ் ஐயர் (பஞ்சாப் கிங்ஸ்) - 3 போட்டிகள் - 159 ரன்கள் - 159.00 சராசரி - 206.49 ஸ்ட்ரைக் ரேட்

  • ஹென்ரிச் கிளாசன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 5 போட்டிகள் - 152 ரன்கள் - 30.40 சராசரி - 168.88 ஸ்ட்ரைக் ரேட்

  • திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்) - 5 போட்டிகள் - 151 ரன்கள் - 37.75 சராசரி - 133.62 ஸ்ட்ரைக் ரேட்

  • 2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் (ஊதா தொப்பி - 20 போட்டிகள் முடிவில்) -

    1. நூர் அகமது (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 4 போட்டிகள் - 10 விக்கெட்டுகள் - 7.86 எகானமி

    2. ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 4 போட்டிகள் - 10 விக்கெட்டுகள் - 8.57 எகானமி

    3. முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் - 9 விக்கெட்டுகள் - 7.75 எகானமி

    4. மிட்செல் ஸ்டார்க் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 3 போட்டிகள் - 9 விக்கெட்டுகள் - 8.91 எகானமி

    5. ஆர் சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 4 போட்டிகள் - 8 விக்கெட்டுகள் - 7.06 எகானமி

    6. கலீல் அகமது (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 4 போட்டிகள் - 8 விக்கெட்டுகள் - 7.50 எகானமி

    7. ஜோஷ் ஹேசல்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 4 போட்டிகள் - 8 விக்கெட்டுகள் - 7.76 எகானமி

    8. ஷர்துல் தாக்கூர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 4 போட்டிகள் - 7 விக்கெட்டுகள் - 10.15 எகானமி

    9. க்ருனால் பாண்டியா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 4 போட்டிகள் - 7 விக்கெட்டுகள் - 10.30 எகானமி

    10. குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 3 போட்டிகள் - 6 விக்கெட்டுகள் - 6.00 எகானமி

    Story first published: Tuesday, April 8, 2025, 8:17 [IST]
    Other articles published on Apr 8, 2025
    English summary
    IPL 2025: Orange and Purple Cap Holders After 20 Matches
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+