விராட் கோலிக்கு இல்லை.. ஆரஞ்சு தொப்பியை தட்டித் தூக்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. கடும் போட்டி!
லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர் யார், ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது யார் என்பது பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கு தொடரின் முடிவில் ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். தற்போது லீக் சுற்று மட்டுமே முடிவடைந்துள்ளது; இன்னும் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், லீக் சுற்றின் முடிவில் எந்தெந்த வீரர்கள் அதிக ரன் குவித்து இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் 2025 லீக் சுற்றின் அதிக ரன் குவித்த வீரர்கள்:
லீக் சுற்றின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் முதல் இடத்திலும், அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
-
சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்): 14 இன்னிங்ஸ்களில் 679 ரன்கள். அவரது சராசரி 52.23 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 155.37 என்பதாகவும் உள்ளது.
-
சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்): 14 இன்னிங்ஸ்களில் 649 ரன்கள். அவரது சராசரி 54.08, ஸ்ட்ரைக் ரேட் 156.38 என்பதாகவும் உள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்): 14 இன்னிங்ஸ்களில் 640 ரன்கள். அவரது சராசரி 71.11, ஸ்ட்ரைக் ரேட் 167.97 என்பதாகவும் உள்ளது.
-
மிட்செல் மார்ஷ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்): 13 இன்னிங்ஸ்களில் 627 ரன்கள். அவரது பேட்டிங் சராசரி 48.23, ஸ்ட்ரைக் ரேட் 163.70 என்பதாகவும் உள்ளது.
-
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு): பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் 13 இன்னிங்ஸ்களில் 602 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மொத்தம் எட்டு அரை சதங்களை அடித்து, இந்த ஆண்டு அதிக அரை சதம் அடித்த வீரராக இருக்கிறார். அவரது சராசரி 60.20, ஸ்ட்ரைக் ரேட் 147.91 என்பதாகவும் உள்ளது.
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்): 559 ரன்கள்.
-
கே.எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்): 539 ரன்கள்.
-
ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்): 538 ரன்கள்.
-
நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்): 524 ரன்கள்.
-
ஸ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்): 514 ரன்கள்.
அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய வீரர்கள்
இந்த ஆண்டு 200 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய வீரராக இருப்பவர் 14 வயதான வைபவ் சூர்யவன்சி.
-
வைபவ் சூர்யவன்சி (ராஜஸ்தான் ராயல்ஸ்): 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள். அவரது ஸ்ட்ரைக் ரேட் 206.5 என்பதாக உள்ளது.
-
நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்): 524 ரன்கள். 196.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இருக்கிறார்.
-
அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்): 439 ரன்கள். 193.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இருக்கிறார்.
-
ஆயுஷ் மத்ரே (சென்னை சூப்பர் கிங்ஸ்): 240 ரன்கள். 188.97 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications