ஐபிஎல் 2025 அதிக ரன்கள்: ஆரஞ்சு தொப்பி யாருக்கு? முதல் 5 போட்டிகளின் முடிவில் நம்பர் 1 யார்?
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளவர் யார்? என்று பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும்.
ஐபிஎல் தொடரின் இடையே ஒவ்வொரு போட்டியின் முடிவில் எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களைக் குவித்திருக்கிறாரோ அவருக்கு அந்த ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். அது ஒவ்வொரு போட்டிக்கும் மாறிக் கொண்டே செல்லும்.

அந்த வகையில், 2025 ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் இஷான் கிஷன் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருக்கிறார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்து இருந்தார். 2025 ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரராகவும் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். அவர் நேற்று நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
லக்னோ அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சாய் சுதர்சன் 74 ரன்கள் சேர்த்து நான்காவது இடத்திலும், லக்னோ அணியைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ் 72 ரன்கள் சேர்த்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரு சிஎஸ்கே வீரர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார். ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 59 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
அடுத்து வரும் போட்டிகளின் முடிவில் ஆரஞ்சு தொப்பியை வேறு வீரர் ஒருவர் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், இஷான் கிஷன் தனது அடுத்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால் அவரே தொடர்ந்து ஆரஞ்சு தொப்பியைத் தக்க வைப்பார். தனது முதல் போட்டியில் 106 ரன்கள் குவித்ததால் இஷான் கிஷன், இந்த ஆண்டு அதிக காலத்திற்கு ஆரஞ்சு தொப்பியைத் தக்க வைக்கும் வாய்ப்பும் உள்ளது.
செய்தி சுருக்கம்:
- 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ளன.
- இஷான் கிஷன் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- 2வது இடத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் 97 ரன்கள் குவித்தார்.
- நிக்கோலஸ் பூரன், சாய் சுதர்சன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- ரச்சின் ரவீந்திரா முதல் 10 இடங்களில் உள்ள ஒரே சிஎஸ்கே வீரர்.
- இஷான் கிஷன் அடுத்த போட்டியில் சதம் அடித்தால் ஆரஞ்சு தொப்பியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications