LSG vs PBKS: ஹூக்கும்! ஸ்ரேயாஸ் Ka ஹூக்கும்! லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்..தொடர்ந்து 2வது வெற்றி
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 16.2 ஓவரிலேயே 172 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி நான்கு புள்ளிகள் பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்கரம் 28 ரன்களும், மிச்சல் மார்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட் வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

எனினும் நிக்லோஸ் பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி பொறுப்பாக விளையாடிய அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. முக்கியமான கட்டத்தில் பூரான் 44 ரன்களிலும், ஆயுஸ் பதோணி 41 ரன்களிலும் வெளியேற மீண்டும் பஞ்சாப் அணி சரிவை நோக்கி சென்றது. இறுதியில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்க டேவிட் மில்லர் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171-ரன்கள் எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பிரான்ஸ் ஆர்யா 8 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான பிராப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.
இதில் ஒன்பது பவுண்டரிகளும், மூன்று சிக்ஸரும் அடங்கும். இதில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 202 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் அசத்தினார். இதில் மூன்று பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் 97 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த போட்டியிலும் அதிரடி காட்டி இருக்கிறார்.
இதேபோன்று நெஹல் வதரா 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி நான்கு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications