Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நீ தான் யா உண்மையான கேப்டன்.. பஞ்சாப் அணியை உருமாற்றியது எப்படி? ஸ்ரேயாஸ் விளக்கம்

ஜெய்ப்பூர்:ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில், பஞ்சாப் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 11 ஆண்டுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தற்போது முதல் 2 இடத்தை அணியை பிடிக்க வைத்து முதல் குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெற வைத்தார். இதன் மூலம், பஞ்சாப் அணி குவாலிபையர் ஒன்றில் தோற்றாலும், இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி, கொல்கத்தா அணியை தொடர்ந்து தற்போது பஞ்சாப் அணியையும் பிளே ஆப்க்கு அழைத்து வந்துள்ளார். பஞ்சாப் அணி பலம் குன்றிய அணியாகவும், வீரர்களை சரியாக பார்த்து கொள்ளாத அணியாகவும் கருதப்பட்டது. ஆனால் இம்முறை ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் தலைவிதியையே மாற்றிவிட்டார். மும்பை அணியின் வெற்றிக்கு பிறகு ஸ்ரேயாஸ், பஞ்சாப் அணி வெற்றி குறித்து பேசியதை தற்போது பார்க்கலாம்.

Shreyas iyer

ஒவ்வொரு தனிநபரும் சரியான நேரத்தில் முன்னேறினர். முதல் போட்டியிலிருந்தே, எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம். நாம் தோல்வியில் இருந்தபோது வீரர்கள் தங்கள் கைகளை உயர்த்தி பங்களித்தனர். பயிற்சியாளர்கள் குழு மற்றும் அணி நிர்வாகத்திற்கு என் பாராட்டுக்கள். ரிக்கி பாண்டிங் வீரர்களை நிர்வகிப்பதில் அற்புதமாக செயல்பட்டார்,

எனக்கு நம்பிக்கை பெறுவதும் முக்கியம். ஆரம்ப வெற்றிகளால் அது நடந்தது. அவர்களுடன் உரையாடல்களும் நடத்தினேன். வீரர்களிடன் நல்ல உறவுகளை பராமரிக்க வேண்டும். டிரஸ்ஸிங் ரூம் முழுவதும் முதலிடத்தில் இருந்ததாக உணர்கிறேன். ஆறு அறிமுகமில்லாத வீரர்களை விளையாட வைத்தது, ப்ரியான்ஷ் தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது, இளம் வீரர்கள் பயமற்றவர்கள்.

அவர்கள் பயிற்சியில் தேவையான விசயங்களை சரியாக டிக் செய்கிறார்கள், தயாரிப்பின் விளைவுகள் இப்போது மைதானத்தில் தெரிகிறது. இங்கில்ஸ் மட்டுமே அவரது இடம் மாறி மாறி இருந்தது. அவர் புதிய பந்தை விளையாடுவதை விரும்புவதால், அவரை அதிக பந்துகள் விளையாட வைக்க விரும்பினேன். அது அற்புதமாக வேலை செய்தது. அவர் எதிரணிக்கு அழிவு தரக்கூடியவர் மற்றும் சிறந்த மனப்பான்மையுடன் முக்கிய போட்டிகளில் அதிரடி காட்ட கூடியவர் என்பது எங்களுக்கு தெரியும். ரிக்கியும் நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம், அவர் எனக்கு நிறைய சுதந்திரம் அளிக்கிறார் என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

Story first published: Monday, May 26, 2025, 23:59 [IST]
Other articles published on May 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+