Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 4 மணி நேரம் கூட தூங்கல.. இறுதிப் போட்டிக்கு முன்பு ஓய்வில்லை என பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்

மும்பை: ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் குவாலிஃபயர் 2 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால், போட்டி முடிவடைய இரவு 1.30 க்கு மேல் ஆகிவிட்டது.

Shreyas Iyer

இந்த நிலையில் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில் தான் இரவு வெறும் 4 மணி நேரம் தான் தூங்கியதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான ஒரு மனதளவில் இருக்கிறேன் என்றால் அது போட்டிக்கு முன்பே தொடங்கி விடும். நான் எவ்வாறு பயிற்சி செய்கின்றேன். நான் எவ்வாறு அன்றைய ஆட்டத்திற்கு திட்டத்தை தீட்டுகிறேன்.

அந்த போட்டியை எவ்வாறு நான் எதிர்கொள்கிறேன் என்பதை பொறுத்துதான் என் மனது அமையும். அதில் நான் செட் ஆகி விட்டேன் என்றால் நான் என் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஜோஷ் இங்கிலீஷ் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள்.

போட்டி முடிவடைய தாமதமாகிவிட்டது. இதனால் என்னால் தூங்கவே முடியவில்லை. நேற்று இரவு ஒரு நான்கு மணி நேரம் தான் நான் தூங்கி இருப்பேன் என்னுடைய அறைக்கு சென்ற போது தான் எனக்கு தெரிந்தது இறுதிப் போட்டிக்கான விஷயங்களில் நான் ஈடுபட வேண்டும் என்று! அதன் ஒரு பகுதியாக தற்போது உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன் என்று ஸ்ரேயாஸ் கூறினார். நாளைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை மழையால் போட்டி தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டால், ரிசர்வ் டே நாளை மறுநாள் அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 2, 2025, 22:13 [IST]
Other articles published on Jun 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+