தர்மசாலா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 போட்டியில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஏழு வெற்றி, மூன்று தோல்வியை தழுவி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
லக்னோ அணி தற்போது வாழ்வா? சாவா என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றேன்.

ஏனென்றால் அனைவரும் சரியான நேரத்தில் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்காக பங்காற்றி இருக்கிறார்கள். இன்று ஆடிய விதம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் நாங்கள் களத்தில் இறங்குகின்றோம். அதுதான் எங்களுடைய மன உத்வேகமாக இருக்கின்றது. சில போட்டிகளில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஏன் இருக்கிறது என்று கேட்டால் நாங்கள் களத்தில் கடின உழைப்பை மேற்கொண்டதால் தான் அது கிடைத்திருக்கிறது.
வெற்றிக்காக நாங்கள் அனைவரும் போராடுகின்றோம். சரியான நேரத்தில் அனைவரும் பார்ம்க்கு திரும்பி இருக்கின்றார்கள். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்ன பொறுப்பு என்பதை நாங்கள் முன்கூட்டியே சொல்லி தெளிவுபடுத்திருக்கின்றோம். அதை சரியாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
போட்டி தொடர்பான விழிப்புணர்வு வீரர்களுக்கு இடையே இருக்க வேண்டும். உங்களுடைய உள்ளுணர்வை நீங்கள் நம்புங்கள். உள்ளுணர்களை தொடர்ந்து பின்பற்றி விளையாடுங்கள். புள்ளிவிவரங்கள் பற்றி கவலைப்பட கூடாது. புள்ளி விபரம் குறித்து யோசிக்கவும் கூடாது. வெற்றி மட்டும் தான் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். தர்மசாலாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி வெற்றியை ருசித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.