Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மோதலில் தான் தோற்றோம், போரில் தோற்கவில்லை.. பேட்டிங் மோசமாக இருந்தது-PBKS கேப்டன் ஸ்ரேயாஸ்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது. இதன் மூலம் பிளே ஆப் சுற்று முறை அறிமுகப்படுத்திய பின் இரண்டாவதாக புள்ளி பட்டியலில் இடம் பிடிக்கும் அணி பைனலுக்கு சென்று வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் அணி தற்போது தோல்வியை தழுவினாலும், அவர்களுக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல இன்னொரு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதில்(மும்பை, குஜராத்) எலிமினேட்டரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை பஞ்சாப் எதிர்கொள்ளும்.

Shreyas Iyer

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஸ்ரேயாஸ், "இந்த நாளை நிச்சயம் மறக்கக்கூடாது. ஆனால் நாம் என்ன தவறு செய்தோம் என்று மீண்டும் கூடி ஆலோசிக்க வேண்டும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்களை பவர் பிளேவில் இழந்தோம்."

"அதில் நாங்கள் செய்த தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய முடிவுகளை சந்தேகிப்பது கிடையாது. எங்கள் அணியின் பிளானிங் மற்றும் மைதானத்திற்கு வெளியே நாங்கள் செய்ததில் எந்த ஒரு தவறும் இல்லை."

"நாங்கள் சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருந்தோம். ஆனால் எங்களுடைய திட்டத்தை களத்தில் பிரதிபலிக்க எங்களால் முடியவில்லை. இந்த தோல்வியில் நான் பவுலர்களை குறை சொல்லவே மாட்டேன். ஏனென்றால் இப்படி ஒரு குறைந்த ஸ்கோரை யாராலும் தற்காத்துக் கொள்ள முடியாது."

"எங்கள் பேட்டிங்கில் தான் நாங்கள் சொதப்பிவிட்டோம்.எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக பயிற்சி செய்ய வேண்டும். நாங்கள் இங்கு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை வித்தியாசமாக இருந்தது.ஆனால் இதுபோல ஒரு காரணத்தை எல்லாம் தொழில் முறை கிரிக்கெட்டில் சொல்ல முடியாது.சூழலுக்கு ஏற்ப சரியாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும். நம் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். நாங்கள் போர்க்களத்தில் தோற்று விட்டோமே தவிர போரை தோற்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்." எலிமினேட்டர் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை அகதாபாத்தில் நடைபெறும்.

Story first published: Thursday, May 29, 2025, 22:52 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+