Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அன்பே ப்ரீத்தி ஜிந்தா.. உங்களுக்காக எத்தனை போட்டி வேண்டுமானாலும் தோற்கலாம்.. இதை பாருங்க

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ரன் குவிப்பில் பல அணிகள் ஈடுபட்டு வரும் நிலையில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை எதிரணி சேசிங் செய்து அசத்துகிறது. இந்த நிலையில் வெறும் 112 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி நிர்ணயித்த உடன் பலரும் ஏன் தான் இந்த போட்டியை நாம் பார்க்கிறோமோ என்று நினைத்தனர்.

பல ரசிகர்கள் தொலைக்காட்சியை ஆப் செய்து விட்டு வேறு வேலையை பார்க்க சென்று விட்டார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் அணி அபாரமாக பந்து வீசி கொல்கத்தா அணியை 95 ரன்களில் சுருட்டியது. இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Preity Zinta

இந்த வெற்றியை பஞ்சாப் அணி நிர்வாகிகள் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாக அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியில் சக உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சிறு குழந்தை போல் துள்ளி குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

இதை பார்த்தவுடன் நமது ரசிகர்களின் மனது கொள்ளை போனது. ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த கொண்டாட்டத்திற்காக இன்னும் எத்தனை போட்டிகள் வேண்டுமானாலும் எதிரணிகள் தோற்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த கொண்டாட்டம் வைரலாகி மீம்ஸ் ஆக வருகிறது.

பலரும் பிரீத்தி ஜிந்தாவுக்கு எவ்வளவு வயதானாலும் இன்னும் அதே அழகுடன் பார்ப்போரை கவரும் வகையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். நெஞ்சினிலே நெஞ்சினிலே என்ற பாடலில் ஆடிய ப்ரீத்தி ஜிந்தா இன்னும் நமது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

இதனால் தான் அவருடைய சின்ன சின்ன அசைவுகளையும் நாம் ரசிக்கின்றோம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ரீத்தி ஜிந்தா வெற்றி பெற்றவுடன் நேற்று நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹலை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதேபோன்று பயிற்சியாளர் பாண்டிங்கையும் கட்டியணைத்து வெற்றியை கொண்டாடினார். தற்போது பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 16, 2025, 17:39 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+