Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நாங்கள் எதையும் சாதிக்கவில்லை.. இனி தான் பெரிய போட்டிகள் இருக்கு- பாண்டிங்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி முதல் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் இந்த வேற லெவல் மாற்றத்துக்கு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், ஸ்ரேயாஸ் ஐயரும் தான் காரணம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் அணியின் வெற்றி குறித்து பயிற்சியாளர் பாண்டிங் பேசியதை தற்போது பார்க்கலாம்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், இதை அடைய நிறைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. அது ஏலத்தில் இருந்து தொடங்குகிறது. ஒரு புதிய அணிக்கு வந்து உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது முக்கிய குறிகோளாக இருந்தது. இது ஒரு தரமான அணி என்பது தெளிவாகத் தெரிகிறது, நாங்கள் ஒரே திசையில் செல்கிறோம். இன்னும் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை, அதைத்தான் நான் வீரர்களிடம் கூறி வருகிறேன்.

Ricky Ponting

பெரிய போட்டிகள் இனி வரவிருக்கின்றன. பிரப்சிம்ரன் 23-24 வயதில் 500 ரன்கள் எடுத்திருக்கிறார், ப்ரியான்ஷ் இந்த தொடரின் முக்கிய கண்டுபிடிப்பாக இருக்கிறார்.அதை மறுப்பது கடினம். பயமற்ற இளம் திறமை, பந்தைப் பார்த்து அடிக்கிறர்கள். வெளிநாட்டு வீரர்கள் - இங்கில்ஸ், ஸ்டோய்னிஸ் ஆகியோர் சிறப்பாக இருந்தனர். ஷ்ரேயாஸ் அற்புதமாக இருந்தார்.

நாங்கள் ஒரு மகிழ்ச்சியான குழு, பத்து வாரங்களாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஷ்ரேயாஸுடன் பணியாற்ற விரும்பினேன். டெல்லி அணியில் இருந்த போது, எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. நான் அவரை நீண்ட காலமாக அறிவேன். அவர் ஒரு தரமான நபர். ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்போது இப்படிபட்ட கேப்டன் தான் தேவை.

அர்ஷ்தீப் சிறப்பாக இருக்கிறார், சாஹல் திரும்பி வர வேண்டும். வீரர்களிடம் தனித்தனியாக பேசினால், அவர்கள் ஷ்ரேயாஸுக்கு நல்ல பாராட்டு கொடுப்பார்கள். இன்றிரவு நாங்கள் கொண்டாடுவோம், கடைசி போட்டியைத் தவிர ஏனெனில் கடைசி போட்டிக்கு இடையே குறுகிய இடைவெளி இருந்தது. நாளை மதியம் விமானப் பயணம் உள்ளது, எங்கள் பயிற்சி நேரங்களை எங்கு பொருத்துவது என்பதை தீர்மானிப்போம். வீரர்களுக்கு ஓய்வு கொடுப்போம்.

ஜான்சன் ஒரு சிறந்த பவுலர்., அவரை மாற்றுவது கடினம். இன்றிரவு ஜேமிசனை உள்ளே கொண்டுவந்தோம், மார்கோ செல்வதற்கு முன் அவருக்கு ஒரு போட்டி கிடைப்பதை உறுதி செய்தோம். ஒவ்வொரு அணியும் வீரர்களை இழக்கிறது, எங்கள் அணியில் திறமைக்கு பஞ்சமில்லை. மார்கோவின் பெரிய இழப்பு இருந்தபோதிலும் அதை ஈடுகட்ட முடியும் என்று பாண்டிங் கூறினார்.

Story first published: Tuesday, May 27, 2025, 7:05 [IST]
Other articles published on May 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+