Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே எல்லாம் பஞ்சாப் அணியிடம் பாடம் கற்கனும்.. பவர்பிளேவில் அடித்து மிரட்டிய ஸ்ரேயாஸ்

மும்பை: ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் ஒவ்வொரு அணியும் பவர்பிளேவில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணி மட்டும்தான் தற்போது மெதுவாக விளையாடி வருகிறது. நேற்று ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கொஞ்சம் நன்றாக விளையாடி ரன்களை சேர்த்தது.

இந்த நிலையில் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்துவது புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 13 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும், லக்னோ அணி 10 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்திலும் உள்ளது.

PBKS vs LSG

இந்த போட்டி லக்னோ அணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த சூழலில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினர். சிஎஸ்கே எல்லாம் முதல் விக்கெட் இழந்தால் அதன் பிறகு டெஸ்ட் இன்னிங்ஸ்க்கு மாறி விடுவார்கள்.

ஆனால் பஞ்சாப் அணியில் பிரியாஸ் ஆர்யா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பஞ்சாப் அணி பட்டையை கிளப்பியது. பவுண்டரி, சிக்ஸர் என விரட்ட ஜோஸ் இங்கிலீஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸரும், ஒரு பவுண்டரி அடங்கும். இவருடைய ஸ்டரைக்ரேட் 214 ஆகும்.

இதே போன்று கேப்டன் பிரயான்ஸ் ஆர்யா,பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் பஞ்சாப் அணி பவர்பிளேவில் அதிக ரன்களை குவித்த அணி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. பஞ்சாப் அணி 10.25 என்ற ரன் ரேட்டை பவர் பிளேவில் கொடுத்திருக்கிறது.

ராஜஸ்தான் அணி 10.68 ரன் ரேட் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதேபோன்று பவர் பிளேவில் அதிக ரன்களை கொடுக்கும் இரண்டாவது அணியாக லக்னோ இருக்கிறது. லக்னோ அணி 10 புள்ளி 54 ரன்கள் பவர் பிளேவில் கொடுக்கின்றது. முதலிடத்தில் சன்ரைசர்ஸ் அணி 10 புள்ளி 65 ரன்கள் கொடுக்கின்றது.

Story first published: Sunday, May 4, 2025, 20:38 [IST]
Other articles published on May 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+