Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1 மணி நேரம் தாமதமான பஞ்சாப் - டெல்லி மேட்ச்.. அம்பயர் எடுத்த முடிவு.. டாஸ் வென்றது யார்?

தரம்சாலா:2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவிருந்த 58வது லீக் போட்டி மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. தரம்சாலாவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு போட வேண்டி இருந்தது. அதற்கு ஐந்து நிமிடம் முன்பாக மழை பெய்யத் துவங்கியது. மழை சற்று அதிகமாக இருந்ததால், மொத்த மைதானமும் உறைகளால் மூடப்பட்டது. அதனால் டாஸ் நிகழ்வு தாமதமானது, போட்டியும் தாமதமானது.

IPL 2025 PBKS vs DC Match in Dharamsala Delayed Due to Rain

இந்தப் போட்டிக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றத்தைச் சந்திக்க முடியும். மேலும் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்க முடியும் என்பதால், இந்த இரண்டு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

7 மணி முதல் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. அதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போட்டி தடைப்பட்டது. பின்னர் இரவு 8:15 க்கு டாஸ் போடப்பட்டது. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இரவு 8:30 மணிக்கு போட்டி துவங்கும் என அம்பயர்கள் அறிவித்தனர். போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கினாலும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் வீரர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அணிகள் :

டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் 11):

ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல்(விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், சமீர் ரிஸ்வி, அக்ஸர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி. நடராஜன்

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் 11):

பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்லிஸ்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

டெல்லி கேப்பிடல்ஸ் இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் :

அசுதோஷ் ஷர்மா, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார், விப்ரஜ் நிகம், திரிபுரானா விஜய்

பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்:

விஜய்குமார் வைஷாக், ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் தூபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர்

Story first published: Thursday, May 8, 2025, 19:23 [IST]
Other articles published on May 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+