GT vs PBKS: இந்த 3 ஓவரை கவனசீங்களா? இங்கு தான் கோட்டை விட்டோம்.. குஜராத் கேப்டன் கில் கருத்து
அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 243 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 42 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார்.
இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அணி கேப்டன் ஷசாங், நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நினைக்கின்றேன்.

நாங்கள் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். பில்டிங்கிலும் நாங்கள் சொதப்பி விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்யும்போது இன்னிங்ஸின் நடுவில் மூன்று ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தோம். மேலும் முதல் மூன்று ஓவர்களிலும் நாங்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இதுதான் எங்களின் தோல்விக்கு காரணம் என நினைக்கின்றேன். எனினும் இந்த போட்டியில் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. நாங்கள் நல்ல முறையில் இந்த தொடரை தொடங்கி இருக்கின்றோம். குறிப்பாக வைசாக் சிறப்பாக யாக்கர்கள் வீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 15 ஓவர்கள் பெஞ்சில் அமர்ந்து விட்டு அதன் பிறகு சிறப்பாக செயல்படுவது என்பது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.
பஞ்சாப் அணி வீரர்கள் தொடர்ந்து யாக்கர்களை வீசி அசத்தினார்கள். நிச்சயம் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் அமைந்தது. இங்கு 240, 250 ரன்கள் எளிதாக அடிக்கலாம். ஆனால் எதிரணியை நீங்கள் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.இந்த போட்டியில் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.


Click it and Unblock the Notifications