Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs PBKS: இன்று ஆடிய இன்னிங்ஸை மறந்துவிடுவேன்.. அடுத்தது தான் முக்கியம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபாரமாக ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றிருக்கிறது. புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே என்ற பாட்டு வரிக்கு ஏற்றார் போல் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் வாழ்க்கை மாறிவிட்டது.

ஒரு கிரிக்கெட் வீரரின் மனைவியுடன் தவறான உறவில் இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஆரம்பத்தில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அது பொய் என நிரூபனமானது. அன்றிலிருந்துஸ்ரேயாஸ் ஐயர் மீது ரசிகர்கள் ஒரு கோபத்திலேயே இருப்பார்கள்.

Shreyas iyer

ஆனால் ஸ்ரேயாஸ், தன்னுடைய கடின உழைப்பு மற்றும் பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக வென்ற ஸ்ரேயாஸ,
தற்போது பஞ்சாப் அணிக்காகவும் சிறந்த முறையில் அணியை வழி நடத்தி வருகிறார்.

இதனை தான் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், இது போன்ற தொடக்கத்தை தான் நாங்கள் விரும்பினோம். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டார்கள். தங்களின் திறமையை வெளிக்காட்டி அணியின் வெற்றிக்காக பங்காற்றினார்கள்.

நாங்கள் என்ன திட்டத்தை தீட்டினோமோ அதை களத்தில் நடைமுறைப்படுத்தினோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எந்த அணியிலுமே சரியான காம்பினேஷன் என்பது ஒன்று கிடையாது. வீரர்களிடையே இருக்கும் நட்புறவும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையும் ஒன்று, இணையும் போது தான் இது போன்ற மேஜிக் நடக்கும்.

ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளுமே வெற்றி பெறும் திறன் இருக்கிறது. ஆனால் ஒரே குறிக்கோளுடன் மன உத்வேகத்துடன் இருக்கும் அணிதான் வெற்றி பெறும். இதை தான் நாங்கள் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசினோம். நான் எப்போதுமே நிகழ்காலத்தில் வாழ்பவன். இன்று நான் அடித்த இன்னிங்ஸ் எனக்கு பழையது. நான் அதைப்பற்றி நீ யோசிக்க மாட்டேன். என்னுடைய அடுத்த குறிக்கோள் எல்லாம் இனி அடுத்த போட்டியை பொறுத்துதான் இருக்கும் என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 1, 2025, 23:44 [IST]
Other articles published on Apr 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+