பணம் முக்கியம் அல்ல, விராட் கோலியுடன் விளையாடுவதே கனவு.. RCB-க்கு தேர்வான காஷ்மீர் வீரர் கருத்து
மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர்களிலே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை காஷ்மீரை சேர்ந்த ராசிக் சலாம் என்ற வேகப் பந்துவீச்சாளர் பெற்றிருக்கிறார். வளரும் வீரர்களுக்கான இந்திய அணியில் ராசிக் சலாம் களம் இறங்கி அசத்திய நிலையில் அவரை ஆர் சி பி அணி ஆறு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் மைக்கேல் தளத்திற்கு ராசிக் சலாம் அளித்த பிரத்தியேக பேட்டியில் தான் கடந்து வந்த பாதை மற்றும் எதிர்காலம் திட்டம் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு தான் எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது.

அப்போதுதான் எனக்கு முதல்முறையாக மாநில அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டில் நான் ஐபிஎல் தொடரிலும் அறிமுகமானேன். அது எனக்கு ஒரு கனவு ஆண்டாக அமைந்தது. அதன் பிறகு காயம் வாய்ப்பின்மை போன்ற விஷயங்களால் அவதிப்பட்டேன். தற்போது மீண்டும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
காஷ்மீர் அணிக்காக சிவப்பு நிற பந்து, வெள்ளை நிற பந்து என இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுகிறேன். ஆர் சி பி அணிக்காக தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அது ஒரு சிறந்த அணி. விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவதை நான் கனவாக நினைக்கின்றேன். எனக்கு பணம் முக்கியம் இல்லை.
இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர்களின் அதிக விலை போனவர் என்ற பெயரும் தேவையில்லை. நான் என்னுடைய ஆர் சி பி அணிக்காக விளையாடி வெற்றியை தேடி தர வேண்டும். அதுதான் என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. விராட் கோலியுடன் விளையாடுவது என்பது என்னுடைய சிறு வயது கனவு.
கோலியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டு அவருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் உடல் தகுதியை பேணுவது, கிரிக்கெட்டுக்கு எப்படி தயாராக வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன். விராட் கோலிக்காக நான் போட்டிகளை வென்று தர முயற்சி செய்வேன். டெல்லி அணிக்காக நான் விளையாடும் போது முதல் சில போட்டிகளில் நான் சரியாக செயல்படவில்லை.
எனினும் அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்தது. இதனால் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்தது. நான் டி20 போட்டிகளில் இறுதி கட்டத்தில் நன்றாக பந்து வீச பயிற்சி செய்தேன். அது தற்போது நல்ல பலனை தருகின்றது. காஷ்மீரில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இதில் பலரும் ஐபிஎல் ஏலத்தில் விலை போனார்கள். காஷ்மீரில் சில இடங்களில் போதிய வசதிகள் இல்லை.
தற்போது மெல்ல, மெல்ல சில வசதிகள் கிடைக்கிறது. எதிர்காலத்தில் காஷ்மீரில் இருந்து பல திறமையான வீரர்களை நீங்கள் காணலாம். என்னுடைய வாழ்நாள் கனவு என்றால் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து உழைத்து வருகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் டெயின் ஸ்டெயின், சமிழ்புவனேஸ்வர் குமார் ஆகியோர் தான்.இதில் புவனேஸ்வர் குமாரும் தற்போது ஆர் சி பி அணியில் இருக்கிறார்.
அவருடன் இணைந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வேன். வாழ்க்கையில் நமக்கு பல ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். என்ன நடந்தாலும் சரி, நாம் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும். கடவுளை நம்புங்கள். கடினமான காலம் நம்மை விட்டு விரைவில் போய்விடும். கடினமான நபர்கள் தான் எப்போதும் இருப்பார்கள். எனவே நாமும் பலமான நபராக மாற வேண்டும். தொடர்ந்து உங்கள் பணியை செய்து கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று ராசிக் சலாம் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 4, 2024, 22:41 [IST]
Other articles published on Dec 4, 2024


Click it and Unblock the Notifications