For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: பிளே ஆப் சுற்று 2 அணிகளுக்கு ஈஸியான வாய்ப்பு.. அடுத்த 2 இடத்திற்கு தான் போட்டியே.. விவரம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் ஒரு சிறிய கேப்புக்கு பின் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. நான்கு இடங்களை பிடிக்கப் போகும் அணி எது என்பது குறித்து தற்போது மீண்டும் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் தற்போது குஜராத் அணி முதல் இடத்தில் இருக்கிறது குஜராத் அணி எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப்க்கு செல்ல முடியும். ஆர்சிபி அணியும் தற்போது 16 புள்ளிகளுடன் உள்ளது.

IPL 2025 IPL Playoff IPL Points table 2025

ஆர் சி பி க்கு இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் ஆர்சிபி ஒரு போட்டியில் வென்றாலும் அவர்கள் பிளே ஆப்க்கு சென்று விடுவார்கள். எனினும் டாப் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் ஆர்சிபி எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது 11 போட்டியில் விளையாடி 15 புள்ளிகளுடன் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ராஜஸ்தான் டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிராக எஞ்சிய போட்டிகள் இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 17 புள்ளிகள் உடன் இருப்பார்கள். எனினும் மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனால் பஞ்சாப் அணியும் எஞ்சிய மூன்று போட்டியில் வெற்றி பெற வேண்டும். இதுபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

இன்னும் டெல்லி மற்றும் பஞ்சாபுக்கு எதிரான போட்டிகள் இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு செல்ல முடியும். ஒரு வேளை ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெறுவதாக இருந்தால், மற்ற அணிகளின் தயவு மும்பை அணிக்கு தேவைப்படும்.

டெல்லி அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இதனால் இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் 19 புள்ளிகள் பெற முடியும். இல்லையென்றால் 17 புள்ளிகள் உடன் நிறைவு பெறுவார்கள். அப்போது ரன் ரேட் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது.

இந்த அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும் ஒரு சதவீத வெற்றி வாய்ப்பு மட்டும் அந்த அணிக்கு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். லக்னோ அணியை பொறுத்தவரை தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். லக்னோ அணியால் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகள் வென்றால் கூட 16 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் ஏதேனும் ஒரு போட்டியில் தோன்றால் கூட அவர்கள் தொடரை விட்டு வெளியேறி விடுவார்கள்.

Story first published: Tuesday, May 13, 2025, 21:55 [IST]
Other articles published on May 13, 2025
English summary
IPL 2025 Playoff scenario - 7 Teams fighting for 4 spots
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+