Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஒரு தோல்வியால் புள்ளி பட்டியலில் சரிந்த சிஎஸ்கே.. பாதாளத்திற்கு சென்ற ரன் ரேட்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்கிய ஒரு வாரத்திலேயே கடும் போட்டியை 10 அணிகளுக்கும் இடையே ஏற்படுத்தி இருக்கிறது. புள்ளிகளை மட்டும் குறி வைக்காமல் பல்வேறு அணிகளும் ரன்களை வேகமாக சேஸ் செய்து ரன் ரேட்டிலும் அதிகமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஐபில் தொடரே முற்றிலுமாக மாறி இருக்கும் நிலையில் சிஎஸ்கே மட்டும் இன்னும் பழைய பேட்டிங்கை ஆடி வருகிறது மற்ற அணிகள் எல்லாம் 200 ரன்களுக்கு மேல் குவித்து வரும் நிலையில் சிஎஸ்கே அணி டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

IPL Points table

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி தற்போது ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியில் தழுவி இருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் அடிபாளத்திற்கு சென்றிருக்கிறது. ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு சிஎஸ்கே அணி நான்காவது இடத்தில் இருந்தது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருந்தால் முதல் இடத்திற்கு சென்று இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே படுதோல்வியை தழுவி இருப்பதால் நான்காவது இடத்திலிருந்து தற்போது ஏழாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. சிஎஸ்கே அணி ரன் ரேட் தற்போது மைனஸ் 1.01 என்ற அளவுக்கு சரிந்து இருக்கிறது. தற்போது ஆர்சிபி அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருந்தாலும் ரன் ரேட் 2.226 என்ற அளவு இருக்கிறது.

லக்னோ அணி இரண்டு புள்ளிகள் மற்றும் 0.96 ரன்ரேட் உடன் இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகள் மற்றும் 0.55 ரன் ரேட் உடன் மூன்றாம் இடத்திலும், டெல்லி அணி 2 புள்ளிகள் மற்றும் 0.37 ரன் ரேட் உடன் நான்காவது இடத்திலும் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி மைனஸ் 0.12 என ரன் ரேட் உடன் இரண்டு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி மைனஸ் 0.30 ரன் ரேட் மற்றும் 2 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே ஏழாவது இடத்திலும், மும்பை எட்டாவது இடத்திலும், குஜராத் அணி ஒன்பதாவது இடத்திலும் ராஜஸ்தான அணி 10வது இடத்திலும் இருக்கின்றது. கடைசியாக மூன்று இடங்களில் இருக்கும் அணி புள்ளி பட்டியலில் தங்களது கணக்கை தொடங்கவில்லை.

Story first published: Saturday, March 29, 2025, 7:01 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+