IPL 2025 புள்ளி பட்டியல்..பஞ்சாப் வெற்றியால் சிஎஸ்கேக்கு ஆப்பு.. எந்த அணி எந்த இடத்தில் இருக்கு?
சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்கி தற்போது நான்கு நாட்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நான்கு நாட்களில் 10 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடுகிறது. இந்த நான்கு நாட்களுக்குள் பல அணி 200 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியிருக்கிறது.
இதனால் இந்த தொடர் எவ்வாறு அமையும்? ரன் ரேட் என்பது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ரசிகர்களும் அணி வீரர்களும் உணர்ந்து இருப்பார்கள். 10 அணிகள் விளையாடும் இந்த தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.

அதிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும். இந்த தருணத்தில் தற்போது ஐந்து அணிகள் ஒரு வெற்றியைப் பெற்று முதல் ஐந்து இடத்தில் இருக்கிறது. ஐந்து அணிகள் தோல்வியை தழுவி கடைசி ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சூழலில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இரண்டு புள்ளிகள் உடன் 2.20 ரன் ரேட் உடன் சன்ரைசர்ஸ் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆர்சிபி அணி இருக்கிறது. ஆர்சிபி 2 புள்ளிகளுடன் ரன் ரேட் 2.13 உள்ளது. மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது. பஞ்சாப் அணி 2 புள்ளி மற்றும் 0.55 ரன் ரேட் உடன் இருக்கிறது. நான்காவது இடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. சிஎஸ்கே 2 புள்ளிகளுடன் 0.49 ரன் ரேட் உடன் உள்ளது. ஐந்தாவது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. டெல்லி இரண்டு புள்ளிகள் மற்றும் 0.37 என்ற ரன் ரேட் உடன் உள்ளது.
சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது பஞ்சாப் அணி அதிக ரன் குவித்து வெற்றி பெற்றதால் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. சிஎஸ்கே அணி மட்டும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இலக்கை முன்பே முடித்து இருந்தால், டாப் இரண்டு இடத்தை பிடித்திருக்கலாம்.
லக்னோ அணி மைனஸ் 0.37 ரன் ரேட் உடன் ஆறாவது இடத்திலும், மும்பை அணி மைனஸ் 0.49 ரன் ரேட் உடன் ஏழாவது இடத்திலும், குஜராத் அணி மைனஸ் 0.55 ரன் ரேட் உடன் எட்டாவது இடத்திலும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மைனஸ் 2.13 ரன் ரேட் உடன் ஒன்பதாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி மைனஸ் 2.20 ரன் ரேட் உடன் பத்தாவது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications