லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகும் புள்ளி பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் தான் உள்ளது. இது ஏன் என்பது பற்றியும் மற்ற ஒன்பது அணிகளின் நிலை என்ன என்பது பற்றியும் பார்க்கலாம். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. அந்த அணி தான் விளையாடிய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
அதன் பிறகு விளையாடிய ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி கேப்டனாக வந்த பிறகும் முதல் போட்டியில் வெறும் 103 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

ஆனால், அடுத்த ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 ஐபிஎல் லீக் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து சற்று முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக மோசமான நெட் ரன் ரேட் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடைய முடியவில்லை.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 1.276 என்பதாக உள்ளது. ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 1.245 என்பதாக உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே நான்கு புள்ளிகள் பெற்று உள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்தங்கி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. ஆனால், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் சற்று அதிகமாக உள்ளது. ஏழாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.104 ஆகும். எட்டாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கிறது. அந்த அணியும் நான்கு புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 0.838 என்பதாக உள்ளது.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 8 புள்ளிகளுடன் உள்ள அந்த அணியின் நெட் ரன் ரேட் 1.081 என்பதாக உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த அணி 8 புள்ளிகளுடன் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நெட் ரன் ரேட் 0.899 என்பதாக உள்ளது.
மூன்றாம் இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியும் 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.672 என்பதாக உள்ளது. நான்காம் இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியும் 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.086 என்பதாக உள்ளது.
ஐந்தாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.803 என்பதாக உள்ளது. ஆறாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து போட்டிகள் மட்டும் விளையாடி மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.065 என்பதாக உள்ளது.
தற்போது 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று மொத்தம் 30 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் நான்கு அணிகள் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இரண்டு அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. நான்கு அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.
கடைசி நான்கு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் குறைந்தது ஆறு வெற்றிகளை பெற்றால் தான் பிளே ஆஃபிற்கு உறுதியாக செல்ல முடியும். ஐந்து வெற்றிகளை பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் தான் அந்த அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். அந்த இக்கட்டான நிலையில் தான் அந்த நான்கு அணிகளும் உள்ளன. முதல் ஆறு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு தான் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியல் - (சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியின் முடிவில்)
1 - குஜராத் டைட்டன்ஸ் - 6 போட்டிகள் - 4 வெற்றிகள் - 2 தோல்விகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 1.081
2 - டெல்லி கேப்பிட்டல்ஸ் - 5 போட்டிகள் - 4 வெற்றிகள் - 1 தோல்வி - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.899
3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 6 போட்டிகள் - 4 வெற்றிகள் - 2 தோல்விகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.672
4 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 7 போட்டிகள் - 4 வெற்றிகள் - 3 தோல்விகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.086
5 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6 போட்டிகள் - 3 வெற்றிகள் - 3 தோல்விகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.803
6 - பஞ்சாப் கிங்ஸ் - 5 போட்டிகள் - 3 வெற்றிகள் - 2 தோல்விகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.065
7 - மும்பை இந்தியன்ஸ் - 6 போட்டிகள் - 2 வெற்றிகள் - 4 தோல்விகள் - 4 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.104
8 - ராஜஸ்தான் ராயல்ஸ் - 6 போட்டிகள் - 2 வெற்றிகள் - 4 தோல்விகள் - 4 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.838
9 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 6 போட்டிகள் - 2 வெற்றிகள் - 4 தோல்விகள் - 4 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -1.245
10 - சென்னை சூப்பர் கிங்ஸ் - 7 போட்டிகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 4 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -1.276