Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 புள்ளி பட்டியல்- பாதாளத்தில் CSK அணி..பிளே ஆப் செல்ல வாய்ப்பிருக்கா?எத்தனை போட்டி வெல்லனும்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் தற்போதைய முதல் பகுதி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. மும்பை அணி தற்போது எட்டாவது இடத்திலும், சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்தச் சூழலில், புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகள் எந்தெந்த இடங்களைப் பிடித்துள்ளன, சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

IPL Points Table

இந்தத் தொடரில் தற்போது வரை தோல்வியடையாத அணியாக டெல்லி உள்ளது. விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஆறு புள்ளிகளுடன் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணியின் ரன் ரேட் 1.25 என்ற அளவில் உள்ளது. இதேபோல், இரண்டாவது இடத்தில் குஜராத் அணி உள்ளது. கில் தலைமையிலான குஜராத் அணி நான்கு போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும் பெற்று, ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 1.03 என்ற அளவில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணி உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும் பெற்று, ஆறு புள்ளிகளுடன் 1.01 என்ற ரன் ரேட்டில் உள்ளது.
நான்காவது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடிய அவர்கள், மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும் பெற்று, ஆறு புள்ளிகளுடன் 0.28 என்ற ரன் ரேட்டில் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் லக்னோ அணி உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகளும் இரண்டு தோல்விகளும் பெற்று, ஆறு புள்ளிகளுடன் 0.07 என்ற ரன் ரேட்டில் உள்ளனர்.

ஆறாவது இடத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி, இரண்டு வெற்றிகளும் மூன்று தோல்விகளும் பெற்று, நான்கு புள்ளிகளுடன் -0.05 என்ற ரன் ரேட்டில் உள்ளது. ஏழாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகளும் இரண்டு தோல்விகளும் பெற்று, நான்கு புள்ளிகளுடன் -0.18 என்ற ரன் ரேட்டில் உள்ளது.

எட்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியும் நான்கு தோல்விகளும் பெற்று, இரண்டு புள்ளிகளுடன் -0.01 என்ற ரன் ரேட்டில் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியும் நான்கு தோல்விகளும் பெற்று, இரண்டு புள்ளிகளுடன் -0.88 என்ற ரன் ரேட்டில் உள்ளது. பத்தாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி உள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியும் நான்கு தோல்விகளும் பெற்று, இரண்டு புள்ளிகளுடன் -1.62 என்ற ரன் ரேட்டில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால், சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் உள்ளன.

இந்த ஒன்பது போட்டிகளில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். அப்படி ஏழு போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியின் புள்ளிகள் 16 என்ற அளவை எட்டும். ஆனால், தற்போது சிஎஸ்கே இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இது மிகவும் கடினமாகத் தெரிகிறது. இருப்பினும், சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சிறிய மாற்றங்களைச் செய்தால், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.

Story first published: Wednesday, April 9, 2025, 7:30 [IST]
Other articles published on Apr 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+