Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 புள்ளிப்பட்டியல்: ஆர்சிபி-க்கு ஜாக்பாட்.. SRH-க்கு செம அடி.. சிஎஸ்கே முதல் இடம் பிடிக்குமா?

ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை ஏழு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. எட்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தைப் பிடித்திருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 23 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

IPL 2025 Points Table RCB Leads CSK in 4th Ahead of Clash

இதன் காரணமாக, சன்ரைசர்ஸ் அணியின் நெட் ரன் ரேட் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் இடத்தை இழந்து தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நெட் ரன் ரேட் -0.128 ஆக உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு போட்டியில் மட்டும் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்று 2.137 என்ற நெட் ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு புள்ளிகளுடன் 0.963 என்ற நெட் ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்று நெட் ரன் ரேட்டில் சிறிய வித்தியாசத்துடன் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தினால், அதிக நெட் ரன் ரேட்டைப் பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

Take a Poll

செய்தி சுருக்கம்:

  • ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தில் உள்ளது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோல்வியடைந்ததால் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முறையே மூன்று மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
  • வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி ஆர்சிபியை வீழ்த்தினால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
Story first published: Friday, March 28, 2025, 7:55 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+