Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு? அனைத்து விருதுகள் வென்றவர்கள் பட்டியல்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. 18 ஆண்டு காலமாக போராடிய விராட் கோலி தற்போது முதல் முறையாக ஐபிஎல் சாம்பியனாக மாறியிருக்கிறார். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவிர கிரிக்கெட் உள்ள அனைத்து கோப்பைகளையும் விராட் கோலி வென்றிருக்கிறார்.

இந்த நிலையில் கோப்பையை வென்ற ஆர்சிபிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. கோப்பையை வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு இந்த பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. கடந்த முறை வழங்கிய அதே பரிசுத்தொகையை தான் மீண்டும் பிசிசிஐ வழங்கி இருக்கிறது.

IPL 2025 Prize money

இதேபோன்று 2025 ஆம் ஆண்டு சீசனில் ரன்னர் அப் பட்டத்தை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இதைப் போன்று மூன்றாம் இடத்தைப் பிடித்த மும்பை அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசு தொகையும், நான்காம் இடத்தைப் பிடித்த குஜராத் அணிக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசி ஆரஞ்சு நிற தொப்பியை சாய் சுதர்சன் வென்று இருக்கிறார். இந்த தொடரில் 759 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த சாய் சுதர்சனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதை போன்று அதிக விக்கெட் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு பர்பிள் நிற தொப்பி வழங்கப்பட்டது.

25 விக்கெட் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினார். இதே போன்று அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் விருதை நிக்கோலஸ் பூரான் கைப்பற்றினார். இந்த தொடரில் பூரான் 40 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதே போன்று நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக டாட் பால்களின் வீசிய முகமது சிராஜ்க்கு பத்து லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

ஐ பி எல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வளரும் வீரருக்கான விருதை சாய் சுதர்சன் பெற்றார். அவருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மதிப்புமிக்க மோஸ்ட் வால்யூபில் வீரர் என்ற விருதை சூரியகுமார் பெற்றார். அவருக்கும் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்த தொடரில் சிறந்த கேட்சை கமிண்டு மெண்டீஸ் பெற்றார். சிஎஸ்கே வீரர் பிரவிஷ்க்கு எதிரான கேட்ச் அவர் பிடித்ததன் மூலம் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை குர்னல் பாண்டியா கைப்பற்றினார். இதேபோன்று 717 ரன்கள் விளாசிய சூரிய குமாரியாதவ்க்கு தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

Story first published: Wednesday, June 4, 2025, 1:14 [IST]
Other articles published on Jun 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+