Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு? ரன்னர் அப் அணிக்கு எவ்வளவு?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையே வெல்லாத பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் முடிவில் புதிய அணி ஒன்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

ஆர் சி பி அணியை பொருத்தவரை 2009, 2011, 2016 என மூன்று சீசன்கள் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆர் சி பி அணி பைனலுக்கு வந்துள்ளது. 18 ஆண்டுகளாக விராட் கோலி ஆர் சி பி அணியின் உண்மை சேவகனாக விளங்கி இருக்கிறார்.

IPL Prize Money

அவருக்கு ஒரு கோப்பையாவது பெற்று தர வேண்டும் என்பது ஆர் சி பி ரசிகர்களின் கனவாக இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை 18 ஆண்டுகளாக ipl தொடரில் விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு முறை 2014 ஆம் ஆண்டு மட்டும் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் பைனலுக்கு பஞ்சாப் அணி வந்திருக்கிறது.

அதுவும் இல்லாமல் ஸ்ரேயாஸ், கொல்கத்தா அணியை கடந்த முறை கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தற்போது மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வேறு அணியை கேப்டனாக இறுதிப்போட்டி வரை வழி நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் உலகின் மிக விலை மதிப்புமிக்க விளையாட்டு தொடராக ஐபிஎல் தொடர் இருக்கிறது.

இந்த சூழலில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பிசிசிஐ யை 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க உள்ளது. இதைப் போன்று இறுதிப் போட்டியில் ரன்னர் அப்பாக முடியும் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதேபோன்று குவாலிபயர் சுற்றில் விளையாடிய மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையும், எலிமினேட்டரில் விளையாடிய நான்காவது இடம் பிடித்த அணிக்கு ஆறரை கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆரஞ்சு கோப்பையை வென்ற வீரருக்கு 10 லட்சம் ரூபாயும், அதிக விக்கெட் கீழ் வீழ்த்திய பர்பில் கோப்பையை வென்ற வீரருக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வளரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருதுக்கு 20 லட்சம் ரூபாயும், மோஸ்ட் வேல்யூப்பல் பிளேயர் எனப்படும்

சிறந்த மதிப்புமிக்க வீரருக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.இந்த தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரருக்கு 10 லட்சம் ரூபாயும்,அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரருக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

Story first published: Tuesday, June 3, 2025, 16:29 [IST]
Other articles published on Jun 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+