Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சாஹலுக்கு கடைசி கட்டத்தில் ஓவர்கள் வழங்கியதற்கு காரணமே இதான்.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய நான்காவது தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை எட்டாவது இடத்திலும், சிஎஸ்கே ஒன்பதாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் தங்களது மெயின் சுழற் பங்குவீச்சாளரான சாகலை பந்து வீச அழைக்கவே இல்லை சாகலுக்கு கடைசி கட்டத்தில் தான் அவர் ஓவர்களை வழங்கினார். இதற்கான காரணம் என்ன டாஸ் வென்றவுடன் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தீர்கள் போன்ற பல கேள்விகளுக்கு ஸ்ரேயாஸ் அளித்த பதிலை தற்போது பார்க்கலாம்.

Shreyas Iyer

இனி அனைத்து போட்டிகளிலும் நாங்கள் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தான் செய்யப் போகிறோம். எந்த மைதானமாக இருந்தாலும் சரி இந்த முடிவை எடுக்கப் போகிறோம். ஏனென்றால் எங்கள் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. நீங்கள் அணியில் சிறந்த ஹிட்டர்ஸ் இருக்கிறார்கள். பந்தை டைமிங் உடன் அடிக்கும் திறமையான வீரர்கள் உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தை பார்க்கும்போது அவ்வளவு பிரமாதமாக இருந்தது. கடந்த போட்டிக்கு பிறகு நான் பிரியான்ஸ் இடம் பேசினேன். ஷாட்டை ஆடும்போது அவருக்கு இதை விளையாடலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. அது குறித்து நான் அவரிடம் பேசி, நீ உன்னை நம்பி விளையாடு. உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேள் என்று கூறினேன். இன்று அவர் எந்த ஒரு தயக்கமும் இன்றி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டார். இது போன்ற மன உத்வேகத்தை தான் நான் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றேன்.

இன்று அவர் நிறுத்தாமல் தொடர்ந்து அதிரடி காட்டினார். கொஞ்சம் கூட பயமின்றி விளையாடினார். நான் பார்த்ததில் தலை சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. நான் சாகலை தாமதமாக ஓவர் வீச அழைத்ததற்கு காரணம் இருக்கின்றது. சிவம் துபே இன்று ஆட்டத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நின்று விட்டார். கான்வேவும் இருந்தார். அப்போது சாகலை பந்து வீசு அழைத்தால் சிவம் துபே அதிரடியாக ஆடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

சாகல் புத்திசாலித்தனமான வீரராக இருந்தாலும், என்னுடைய உள்ளுணர்வு வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை குறைத்து பந்து வீசினால் அது சிவம் துபேக்கு எதிராக கை கொடுக்கும் என்று தோன்றியது. எனவே சிவம் துபேவுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினேன். நாங்கள் சாகலை கொஞ்சம் தாமதமாக பந்து வீச அழைத்தது இன்று எங்களுக்கு நன்மையை கொடுத்தது.

நாங்கள் பல கேட்ச்களை இன்று விட்டோம். இதுகுறித்து நிச்சயம் பேச வேண்டும். இன்று ஆட்டத்தில் நாங்கள் ஒன்றும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தவில்லை. தொடரின் ஆரம்ப கட்டம் என்பதால் சில வீரர்கள் கொஞ்சம் பதற்றமாக இருக்கலாம். வீரர்கள் பயமின்றி களத்தில் நிற்க வேண்டும். கேட்சுக்களை பிடிக்க வேண்டும். பில்டிங்கை பலப்படுத்துவதற்கான பயிற்சியில் இறங்க வேண்டும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுதான் முக்கியம் என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 8, 2025, 23:58 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+