Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அதிர்ஷ்டத்தால் தான் அபிஷேக் சர்மா சதம் விளாசினார்.. 2 கடின கேட்சை விட்டது தவறு.. ஸ்ரேயாஸ்

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி 245 ரன்கள் குவித்தும், அதனை இரண்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கிறது. குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்தத் தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் சொன்ன கருத்தை தற்போது பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அபாரமான ஸ்கோரை நிர்ணயித்தோம். ஆனால் இந்த ஸ்கோரை இரண்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் சன்ரைசர்ஸ் அணி எட்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருகின்றது.

PBKS VS SRH

நாங்கள் இரண்டு கடினமான கேட்சுகளை பிடித்திருந்தால் போட்டி எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கும். அபிஷேக் சர்மா இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. சில கேட்ச்களை நாம் பிடித்தால் தான் நம்மால் ஆட்டத்தை வெற்றி பெற முடியும். ஆனால் நாங்கள் அங்கு சில தவறுகளை செய்து விட்டோம்.

நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. மீண்டும் எந்த இடத்தில் தவறு செய்திருக்கின்றோம் என்பதை பார்த்து அதை சரி செய்ய வேண்டும். அபிஷேக் ஷர்மா இன்று பந்தை அடித்த இடம் பிரமாதமாக இருந்தது. தொடக்க வீரர்கள் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். எங்கள் அணியின் நாங்கள் அதிக அளவு பேட்ஸ்மேன்களை ரொட்டேட் செய்யவில்லை என்று நினைக்கின்றேன்.

இதேபோன்று லோகி பெகுர்சன் காயம் காரணமாக சென்றது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் எப்போதுமே எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை எடுப்பார். அது மிகப்பெரிய இழப்புதான். 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து அவர் பந்து வீசுவார். மற்ற பவுலர்களும் எங்களுக்கு வெற்றியை பெற தான் இருக்கிறார்கள். எனவே இதை நான் ஒரு காரணமாக சொல்ல மாட்டேன்.

நாங்கள் இன்றைய போட்டிக்கு முன்பு 230 ரன்கள் அடித்தால் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் சன்ரைசர்ஸ் பேட்டிங் செய்யும்போது பனிபொழிவு இருந்தது இதன் மூலம் ஆடுகளம் கொஞ்சம் ஈசியாக மாறியது. எனினும் சன்ரைசஸ் பேட்ஸ்மேன்களை பாராட்ட வேண்டும் என்று மிகச் சிறந்த ஒரு ஆட்டத்தை அவர்கள் ஆடி இருக்கிறார்கள். நான் ஐபிஎல் தொடரில் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்று ஸ்ரேயாஸ் கூடியுள்ளார்.

Story first published: Saturday, April 12, 2025, 23:56 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+